மணிக்கொடி (டிசம்பர் 3, 1934) முதல் பக்கம்
மணிக்கொடி என்பது 1930களில் வெளிவந்த வரலாற்றுப் புகழ்மிக்கதொரு தமிழ் இதழ். இது முதலில் மாதம் இருமுறையும், பின்னர் வார(கிழமை) இதழாகவும் வெளிவந்தது 1935ல் நின்று போனது.
தமிழில் முதல் சிறுகதையை எழுதியவரும், கொடைக்கானல் அடிவாரத்தில் உள்ள வத்தலக்குண்டு என்னும் ஊரைச் சேர்ந்தவருமான பி. எஸ். ராமையா அவர்களின் முயற்சியால் பல்வேறு இதழ்களுடனும், நிறுவனங்களுடனும் சேர்ந்து மேலும் சில ஆண்டுகள் இவ்விதழ் வெளிவந்து 1939 ஆம் ஆண்டில் முற்றாக நின்று விட்டது.
மணிக்கொடிக்கு, பி.எஸ். ராமையா ஆசிரியராகவும், கி. ராமசந்திரன் (கி.ரா) துணையாசிரியராகவும் இருந்தனர். மணிக்கொடியின் சிறப்பான புகழுக்கு அதில் பங்கு கொண்டு இலக்கிய வரலாறு படைத்த எழுத்தாளர்களே காரணம்.
புதுமைப்பித்தனின் துன்பக்கேணி, சி. சு. செல்லப்பாவின் ஸரசாவின் பொம்மை போன்ற படைப்புகள் இவ்விதழில் தான் வெளியாயின. புகழ்பெற்ற எழுத்தாளர்களாகிய ந. பிச்சமூர்த்தி, கு. ப. ராஜகோபாலன், பி. எஸ். இராமையா, ந.சிதம்பரசுப்பிரமணியன், சி. சு. செல்லப்பா, க. நா. சுப்பிரமணியம், லா. ச. ராமாமிர்தம், ஆர். சண்முகசுந்தரம், ஆகியோரின் படைப்புகள் மணிக்கொடியின் புகழுக்குக் காரணம்.
இவ்விதழ் வெளியான காலத்தையும், அதனால் ஏற்பட்ட இலக்கிய விழிப்புணர்வையும் குறிக்கும் விதமாக மணிக்கொடிக் காலம் என்னும் தொடர் சிற்றிதழ் இலக்கிய வட்டாரங்களில் பயிலப்படுகின்றது :-http://ta:-..wikipedia.org/s/a0o
மரவண்டின் ரீங்காரம் என்ற வலைப்பூவில்
மணிக்கொடி குறித்த தகவல்களை விரிவாகக்
காணலாம்.
http://maravantu.blogspot.in/2005/05/blog-post_24.html
மணிக்கொடி (இலங்கை இதழ்)
மணிக்கொடி 1950களில் இலங்கையிலிருந்தும் கலை, இலக்கிய, அரசியல் மாத இதழாக வெளிவந்துகொண்டிருந்தது..
இணுவைமாறன் என்பவர் அதன் ஆசிரியராகத் திகழ்ந்தார்.
இவ்விதழில் இலங்கையின் முற்போக்கு எழுத்தாளர்களான மு.கந்தையா, க.கைலாசபதி, பிரேம்ஜீ, எச்.எம்.பி.முகைதீன், ஜீவா போன்றோரின் ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன.
உதவி :- http://ta.wikipedia.org/s/gvk
0 comments:
Post a Comment