பாவை பப்ளிகேஷன்ஸ், விலை ரூ.35
மனித நாகரிக வரலாற்றில் நிலத்தை அளப்பது என்பது வரலாறு தொடங்கிய காலத்திலிருந்தே உலகெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நிலம் மற்றும் நில அளவை குறித்து அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட நூல் " மண்ணை அளந்தவர்கள்”
வரைபடங்கள், மற்றும் அரிய புகைப்படங்கள், பட்டியல்களுடன், பொதுப் பணித்துறையில் தலைமைப் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்ற முனைவர் பழ.கோமதிநாயகம் எழுதியுள்ளார்.
இதில் நில அளவை, நிலவரை உருவான விதத்தைத் தெளிவுபடுத்தியிருப்பதுடன், தமிழகத்தில் நில அளவை எவ்வாறு தோன்றியது என்பது பற்றியும் அதன் வரலாற்றையும் சுவைபடக் கூறியுள்ளார்.
குடத்துள் இட்ட விளக்காகத் திகழ்ந்த இவரது சிறப்பியல்புகள் இவரது இறப்பிற்குப் பின்னரே பலரால் உணர முடிந்தது. சென்னை தேவநேயப் பாவாணர் கூடத்தில் நிகழ்ந்த நினைவு நாள் கூட்டத்தில் பங்கேற்றவரே அவற்றை அறிவர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நீர் மேலாண்மை குறித்த த்கவல்களைத் தந்தவர் இவர்தான். அரசுப் பணியில் இருக்கும்போதே ஈழம் சென்று பிரபாகரனுக்கு நீர் மேலாண்மை குறித்த ஆலோசனைகளை வழங்கியவர் என்பது இவரது குடும்பத்தாருக்கும்,, உலகத்தாருக்கும் தெரியவந்தது.
மதுரைத் தியாகராசர் பொறியியல் கல்லூரியில் இளநிலைப் பொறியியல் பட்டமும், சென்னை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நீரியல்-நீர்வளப் பொறியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். அனெரிக்காவின் கொலொராடோ மற்றும் ஊட்டா மாகாணப் பல்கலைக் கழகங்களில் நீர் மேலாண்மையிலும் கல்வி கற்பித்தலிலும் சிறப்புப் பட்டயங்களும் பெற்றவர்.
தமிழக அரசின் பொதுப்பணித் துறையில் 34 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியபின், வடிவமைப்புப் பிரிவின் தலைமைப் பொறுப்பிலிருந்தபோது விருப்ப ஓய்வு பெற்றார்.
தமிழகத்தின் மணல் மேலாண்மைப் பொறுப்பினையும் புதிய பதவி உயர்வையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு வற்புறுத்தியதால், ஊழல் பேரரசுக்குள் செல்ல விருப்பமின்றி , விருப்ப ஓய்வு பெற்றார்.
1. தமிழகம்...தண்ணீர்... தாகம் தீருமா?
2. தமிழக பாசன வரலாறு
3.தாமிரவருணி - சமூக- பொருளியல் மாற்றங்கள்
4. பெரியாறு அணை மறைக்கப்பட்ட உண்மைகள்
5. தமிழக ஆறுகளில் மணல் கொள்ளை
( மேலும் சில நூல்கள் ஆங்கிலத்தில் )
ஆகிய நூல்களும் இவரால் எழுதப் பெற்றவையே. தமிழகத்தை நேசிக்கும் ஒவ்வொருவர் வீட்டிலும் அவசியம் இடம்பெற வேண்டிய நூல்கள் இவை.
படித்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.
இவரது பெயரால் ஆண்டுதோறும் ஒருலட்சம் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது.
பழ. நெடுமாறன் இவரது உடன் பிறப்பு.
தேவநேயப் பாவாணர் கூடத்தில் நிகழ்ந்த முதல் நினைவுக் கூட்டத்தில் பேசியோர்:- வை.கோ. தா.பாண்டியன்,பழ.நெடுமாறன். அந்தப் பேச்சுரைகள் சிறு நூலாக வெளியிடல் வேண்டும். கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டதொரு ஆவணமாக அது திகழும்.
இந்த பத்தகங்கள் எனக்கு தேவைப்படுகின்றது. உதவ முடியுமா?
ReplyDeletetexlords@gmail.com
அனைத்து நியூ செஞ்சுரி புத்தக நிலையங்களிலும் கிடைக்கும்.
ReplyDeleteகோவை 0422-2380554
சென்னை பாவை பப்ளிகேஷன்ஸ், மின்னஞ்சல் முகவரி
pavai123@yahoo.com 044/28482441, 28482973
நன்னூற்களை நேசிக்கும் நேதாஜிக்கு மிக்க நன்றி. அதிலும் வாங்கி வாசிக்கவேண்டும் என்ற சிந்தனைக்கும் நல் வணக்கம்.