தெலங்கானா தனி மாநிலம் கோரி நடைபெற்ற போராட்டங்களையும், கடந்து வந்த பாதைகளையும் பார்க்கலாம்.
* ஒருங்கிணைந்த ஹைதராபாத் மாநிலத்துக்குள் தெலங்கானா மண்டலம் கடந்த 1948-ஆம் ஆண்டு, செப்டம்பர் 17-ல் இணைக்கப்பட்டது.
* ஹைதராபாத் மாநில முதல் முதல்வராக கடந்த 1950, ஜனவரி 26-ல் எம்.கே. வெள்ளோடியை மத்திய அரசு நியமித்தது. இந்த மாநிலத்துக்கு 1952-ல் முதல் முறையாக நடைபெற்ற தேர்தலில் ராமகிருஷ்ண ராவ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கடந்த 1953, நவம்பர் 1-ல் மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து ஆந்திரம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது.
அப்போது, ஆந்திர தலைநகராக கர்னூல் நகரம் (ராயலசீமா மண்டலம்) இருந்தது.
ஆந்திரம் தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி பொட்டி ஸ்ரீராமுலு, 53 நாள் உண்ணாவிரதம் இருந்து இறந்தது குறிப்பிடத்தக்கது.
* கடந்த 1953-ல் ஆந்திர மாநிலத்துடன் ஹைதராபாத் மாநிலத்தை இணைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஹைதராபாத் மாநில முதல்வர் பர்குல ராமகிருஷ்ண ராவ் ஆதரவு தெரிவித்தார். ஆனால், தெலங்கானா மண்டலத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
* கடந்த 1956, பிப்ரவரி 20-ல் ஆந்திராவுடன், ஹைதராபாத் மாநிலத்தை இணைக்கும் ஒப்பந்தத்தில் பர்குல ராமகிருஷ்ண ராவும், பெஷவாட கோபால ரெட்டி ஆகியோரும் கையெழுத்திட்டனர். அப்போது தெலங்கானா மண்டலப் பகுதி மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று கூறப்பட்டது.
* கடந்த 1956, நவம்பர் 1-ல் ஆந்திர மாநிலத்துடன் ஹைதராபாத் இணைக்கப்பட்டது. ஆந்திர மாநில தலைநகராக ஹைதராபாத் மாற்றப்பட்டது
.
* மரி சென்னா ரெட்டி என்பவரால் தெலங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி தெலங்கானா பிரஜா சமிதி என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. ஒப்பந்தத்தில் தெரிவித்தபடி தெலங்கானா பகுதி மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படவில்லை என்று கூறி, 1969-ல் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டம் வன்முறையாக மாறியதில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 300 மாணவர்கள் இறந்தனர்.
* இதையடுத்து, பிரதமர் இந்திரா காந்தி 1969, ஏப்ரல் 12-ல் ஆந்திராவுக்கு வருகை தந்து, தெலங்கானா தலைவர்களுடன் பேச்சு நடத்தினார். அவரது திட்டத்தை ஏற்றுக்கொள்ள தெலங்கானா தலைவர்கள் மறுத்துவிட்டதால் போராட்டம் நீடித்தது.
* தெலங்கானா கோரிக்கைக்கு எதிராக, கடந்த 1972-ல் ஜெய் ஆந்திரா அமைப்பு ஆந்திர- ராயலசீமா பகுதியில் தொடங்கப்பட்டது.
* கடந்த 1999 வரை, தனி மாநில கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருந்தது. அப்போது இதற்கு மீண்டும் உயிர் கொடுத்தது காங்கிரஸ் கட்சிதான்.
* அமைச்சரவையில் இடம் தராததால் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து பிரிந்து சென்று, 2001, ஏப்ரல் 27-ல் சந்திரசேகர ராவ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைத் தொடங்கினார்.
* 2004- தேர்தலின்போது தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கப்படும் என்று கூறி டி.ஆர்.எஸ் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டு சேர்ந்து வெற்றி பெற்றது. இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில் 2006-ல் மத்தியிலும், மாநிலத்திலும் அமைச்சரவையில் இருந்து டி.ஆர்.எஸ் வெளியேறி, தனியாகப்
போராடி வந்தது.
* 2009 நவம்பர் 29-ல், டி.ஆர்.எஸ் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. டிசம்பர் 9-ல் மத்திய அரசு தெலங்கானா கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தது. டிசம்பர் 23-ல் இந்தக் கோரிக்கை கிடப்பில் போடப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டனர்.
* தெலங்கானா கோரிக்கை தொடர்பாக 2010, பிப்ரவரி 3-ல் முன்னாள் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் 5 பேர் குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழுவின் அறிக்கை டிசம்பர் 30-ல் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.
* 2011-12-ல், தெலங்கானா பகுதியில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்த போராட்டம் (பந்த்) என தொடர்ந்தது. எம்.எல்.ஏக்கள் பலர் கோரிக்கையை வலியுறுத்தி பதவியை ராஜிநாமா செய்தனர்.
* தெலங்கானா கோரிக்கை பற்றி இறுதி முடிவு எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் 2012, டிசம்பர் 28-ல் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியது.
புதிய மாநிலம் அமைத்திட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒப்புதல்.
சேர்க்கப்படக்கூடும் எனக் கருதப்படும் மாவட்டங்கள்:-
அடிலாபாத் , கரீம் நகர், வாரங்கல், கம்மம், நலகொண்டா, ஹைதராபாத்,
மெஹபூத் நகர், ரங்க்கா ரெட்டி, மேடக், நிஜாமாபாத்

நன்றி :- தினமணி, 31-07-2013
0 comments:
Post a Comment