Home » » 3-ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் ”வல்லமை” இணைய இதழ் !

3-ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் ”வல்லமை” இணைய இதழ் !


மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து மின் இதழ்.
பெயர் வல்லமை. www.vallamai.com
நிறுவனர் கவிஞர் முனைவர் அண்ணா கண்ணன்.

கட்டற்ற இதழாளராக, பல்வேறு இதழ்களுக்குச் செய்திகள், துணுக்குகள், கட்டுரைகள், நேர்காணல்கள் என எழுதி வந்தவர்,  கவிஞர் முனைவர் அண்ணா கண்ணன்.

பார்க்க http://youtu.be/gewn9-eqfyg

ராணி வார இதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார்.
அமுதசுரபி மாத இதழுக்கு ஆசிரியரானார்.
சிபி வலை இதழில் தமிழ்ப் பகுதி ஆசிரியரானார்.
சென்னை ஆன்லைன் இதழில் தமிழ்ப் பகுதி ஆசிரியரானார்.

இவ்வாறிருந்தவர் பணிக்காக எங்கும் செல்லாதிருந்த காலத்தில், 2010இல் வல்லமை இதழைத் தொடங்கினார். அக்காலத்தில் இலங்கை மலேசியா, சிங்கப்பூர்ப் பயணங்களையும் மேற்கொண்டார்.

வல்லமை இதழைத் தொடங்கிய காலத்தில், 2010இல், என் வீட்டில் ஓர் ஆலோசனைக் கூட்டம். இதழுலகின் மேதைககள் வந்த கூட்டம்.

மீண்டும் 2013இல், மூன்றாம் ஆண்டு நிறைந்த காலத்தில் என் வீட்டில் ஓர் ஆலோசனைக் கூட்டம். முந்தைய கூட்டத்துக்கு வந்தோர் போலவே 13.7.13 அன்றும் என் வீட்டுக்கு இதழுலகின் மேதைகள், பல்துறை விற்பன்னர்கள் வந்திருந்தனர்.

01. இன்னம்பூரான், இயற்பெயர், சௌந்தரராசன் சிறீனிவாசா. இந்தியத் தணிக்கைத் துறைத் துணைத் தலைவர் ஓய்வு. கும்பகோணம் அருகே இன்னம்பூரில் பிறந்தவர். இந்தியா / இங்கிலாந்து / அமெரிக்கா என மாறி வசிப்பவர். எங்கிருந்தாலும், தமிழ் இணையத்தில் ஆர்வத்துடன் இயங்குபவர்.

02. நாகராசன் வடிவேல், சென்னைப் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர்.

03. சம்பத்தர் இராமசாமி, இந்தியன் எக்சுபிரசில் பணி. இந்து இதழின் விசாகப்பட்டினப் பதிப்பாசிரியர், ஓய்வு. சென்னை வாசம். 70 வயதாகும் இளைஞர். தெலுங்கு, ஆங்கிலம், தமிழ் வடமொழி பயின்ற வல்லுநர்.

04. விசாலம், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர், எழுத்தாளர்.

05. நூ. த. லோகசுந்தரம், எழுத்தாளர், ஆய்வாளர்.

06. கவிதாயினி மதுமிதா.

07. பானுமதி (ஆதிரா முல்லை), தமிழ்ப் பேராசிரியர், வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி.

08. செம்மல், மருத்துவர், மணவை முஸ்தபாவின் மகன், அறிவியல் தமிழ் மன்றம் நடத்துபவர்.

90. பெருவை பார்த்தசாரதி - சென்னை விமான நிலைய சரக்ககப் பிரிவில் கண்காணிப்பாளர்.
ஆகியோர் நேரில் வந்து கலந்துகொண்டனர்.

10. விசகப்பட்டினத்திலிருந்து திவாகர், தொலைபேசி வாயிலாகவும்

11. அமெரிக்காவிலிருந்து பழமைபேசி, இசுக்கைப் வழியாகவும் பங்கேற்றனர்.

நிகழ்வின் படங்கள் காண்க.
3 photo


Add a comment... (Shared privately)


0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger