தாரிணி பதிப்பகம், சென்னை.
dharinipathippagam@gmail.com
இந்திய விடுதலைப்போராட்டத்தில் பங்கேற்றுச் சிறைக்கும் சென்ற மதுரை சிங்காரவேல் பாண்டியன் திருமகனார். இறை நம்பிக்கையுடைய அறிவியல் விஞ்ஞானி. 41 ஆண்டுகாலப் பணிநிறைவு பெற்று, தற்பொழுது கனடாவில் வாழ்ந்து வருகின்றார்., ஜெயபாரதன்.
1960-ஆம் ஆண்டு முதல் இவரது அறிவியல் கட்டுரைகள், கதைகள்,கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளி வந்திதிருக்கின்ரன. கணினி உலகில் இனிய தமிழில் கடந்த 7 ஆண்டுளாக 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகல், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. விண்வெளிப் பயணங்கள் & கிளியோபாத்ரா ஆகிய இரண்டு நூல்கள் அச்சில் உள்ளன.
இராமயண நாயகி சீதாவை இந்தப் பாரத தேசம் ஒரு மாதாவாகக் கொண்டாடுகிறது. ஆனால் ஆணாதிக்கக் கொடுங்கோன்மையால் அன்னை சீதா பட்டபாடுகளை உள்ளம் உருக்கும் விதத்தில் சீதாயணம் நாடகத்தில் ஜெயபாரதன் சித்தரித்துள்ளார்.
பெண்ணுக்குப் பெருமையும் மகிழ்வும் கொடுக்கும் தலைப்பு சீதாயணம். காட்டில் விடப்பட்ட சீதா குழதைகளுக்காக வேதனைகளைச் சுமந்த மாதரசி. கடைசிவரை கணவனுடன் சேரவே துடிக்கின்றாள். பாவம் சீதா, ஆனால் இராமனின் பார்வை கூட அவள்மேல் படவில்லை.மக்கள் வம்பு பேசினால் சிறுவர்களும் துரத்தப் படுவார்களா? குழந்தைகளின் சாயலைக் கூறுகின்றார், ஆசிரியர்.. தாய் தந்தை சாயல்களைக் கூறுகின்ரார். சீதாவுக்கு நடந்த கொடுமை ஓர் நிகழ்வு. இன்றும் தினமும் பல சீதைகள் சாகாமல் வதைபட்டுத் துடித்துக் கொண்டிருக்கின்ரார்கள். இராம காதைக்கு சீதாயணம் என்ற பெயரை வைத்ததன்மூலம், வால்மீகியின் குறையை ஜெயபாரதன் களைந்து விட்டார் என்றே முடிவு கொள்ளலாம்.
மூலநூல் இராமாயணம் பின்னால், பலரால், பலமுறை மாற்றப்பட்டு, தெய்வீக முலாம் பூசப்பட்டு பொய்க் கதையாய் மங்கிப் போனது. பனை ஓலையில் எழுதப்பட்ட இராமாயணம் இடைச் செருகல் நுழந்து கலப்படமாக்கப்பட்ட ஒரு காப்பியம் என்று அரசியல் ஆன்மீக மேதை இராஜகோபாலாச்சாரியார் கூறுகிறார். வால்மீகி இராமாயணத்தை 9-ஆம் நூற்றாண்டிலே இந்திய மொழிகளில் முதன்முறையாக எழுதிப் பெருமை தந்தவர் கவிச் சக்கரவர்த்தி கம்பன்.
கம்பரும் பின்னால் இந்திமொழியில் எழுதிய துளசிதாசரும் மூலக் கதையைச் சற்று மாற்றியுள்ளதாக மூதறிஞர் இராஜாஜி கூறுகின்றார். வால்மீகி இராமனைக் கடவுளின் அவதாரமாகச் சித்தரிக்கவில்லை என்றும், இராமனே தன்னை ஓர் அவதார புருஷனாகக் கருதவில்லை.என்றும் இராஜாஜி தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
சீதாயணத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான் யாவரும் மனிதப் பிறவிகளாகவே சீதாயணத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளனர். மானிட இராமனைத் தேவனாய் உயர்த்தி மாற்றியவருக்கு இருந்த உரிமைபோல், அவனைக் கீழே இறக்கி மீண்டும் மனிதனாய்க் கொண்டுவர எனக்கும் உரிமை உள்ளது என்னும் துணிச்சலில் சீதாயணத்தை எழுத ஆரம்பித்ததாக ஜெயபாரதனின் கூற்றிலும் உண்மை உள்ளது.
இந்தியாவின் இருபெரும் இதிகாசங்கள் இராமாயணம் & மகாபாரதம். இவற்றைப் பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சென்றதில் திருமுருக குக கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்குப் பெரும் பங்குண்டு. மண்ணாசையால் விளைந்தது மகாபாரதம், பெண்ணாசையால் விளைந்தது இராமாயணம் என்பதோடு அவரது கருத்து நின்றுவிட்டது.
இன்றுவரை சீதாவிற்கு இராமாயணத்தில் இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துப் பென்ணுரிமை பேசுவோர் உட்பட யாருமே குரல் கொடுக்கவில்லை.
கனடாவில் வாழும் பெரியவர் சி.ஜெயபாரதன் தெய்வ நம்பிக்கை உடையவர். சீதாவிற்காக வாதாடும் இந்நூல் இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கபட்டால் பத்துத் தலை இராவணன் உட்பட்ட பொய்மைகள் தூளாகிவிடும். படைப்பாளியி துணிச்சலையும், நேர்மையையும், தமிழ்ப்பற்றையும் நெஞ்சாரப் போற்றுவோம்..
நாட்டில் பெண்ணின் மதிப்பு உயரவேண்டும்; ஒற்றுமை ஓங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு படைக்கப்பட்ட சீதாயணம் படிக்கும் அனைவரது மனமேடையிலும் தவறாது அரங்கேறும்.
100-க்கும்மேற்பட்ட இராமாயணங்கள் உண்டு. ஒரு இராமாயணத்தில் சீதா இராமனின் தங்கையாகக் கூடச் சித்தரிக்கப்படுகின்றாள் என்று கேட்டதுண்டு.

0 comments:
Post a Comment