ஒரு மேதையின் ஆளுமை
புதிய நம்பிக்கை வெளியீடு ,அக்டோபர் 1994
ஆசிரியர், பொன்விஜயன்
50,வன்னியர் தெரு,
சென்னை-600 094
136 பக்கங்க்கள், விலைரூ.20/-
நூலாசிரியரின் முயற்சியில் வண்ணமலர் திரைப்படக் கழகம் உருவான கதை
மனசை வக்கிரப்படுத்தும் வன்முறை சினிமாக்களுக்கு மாற்று குறித்தான சிந்தனை இப்புதகத்தை வெளியிட்ட பொன் விஜயனுக்குத் தோன்றியது. அச்சமயம் ஈரோட்டில் இயங்கிய 'சலனம்', மதுரையில் இயங்கிய யதார்த்த, திருவண்ணாமலையில் இயங்கிய விடியல் போன்ற திரைப்படக் கழகங்க்களின் ஒத்துழைப்பாலும், வழிகாட்டுதலாலும் இந்நூலாசிரியரின் முயற்சியால் "வண்ணமலர் திரைப்படக் கழகம்" .மலர்ந்தது.இதனை ஆசிரியர் முதற்கட்ட வெற்றியாகக் குறிப்பிடுகின்றார்.
வண்ணமலர் திரைப்படக் கழகத்தின் சார்பில் , சத்யஜித்ரேயின், எளிமையும் அழகும் நிறைந்த கிராமிய மணம் வீசும் "தீன் கன்யாவை"முதலில் திரையிட்டனர்.. படம் பார்க்க வந்திருந்த 193 பேரில், ஒரு சிலரைத் தவிர எவரும் படத்தைப் பார்த்து ரசிக்கத் தயாராக இல்லை. படம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே கூச்சல், கேலி, கிண்டல் எழுந்தன. படத்தின் மென்மை காணாமற் போனது. பொறுமையின்றிப் பலர் வெளியேறத் தொடங்கினர்.
வண்ணமலர் திரைப்படக் கழகத்தின் சார்பில் , சத்யஜித்ரேயின், எளிமையும் அழகும் நிறைந்த கிராமிய மணம் வீசும் "தீன் கன்யாவை"முதலில் திரையிட்டனர்.. படம் பார்க்க வந்திருந்த 193 பேரில், ஒரு சிலரைத் தவிர எவரும் படத்தைப் பார்த்து ரசிக்கத் தயாராக இல்லை. படம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே கூச்சல், கேலி, கிண்டல் எழுந்தன. படத்தின் மென்மை காணாமற் போனது. பொறுமையின்றிப் பலர் வெளியேறத் தொடங்கினர்.
ஆழ்ந்து சிந்தித்தபோது, பார்வையாளர்கள் கேவலமான ரசனையுடையவர்கள் என்பதல்ல. பரந்துபட்ட பார்வைக்கு வாய்ப்பில்லாத வாழ்க்கைச் சூழலில் இறுக்கமான உழைப்பின் அலுப்புக்குத் தேவையான வடிகாலாக அவர்களுக்கு திட்டமிட்டும், வணிகத் தந்திரமாகவும், செலுத்தப் பட்டிருந்த போதையும் வக்கிர ரசனையும்தான்.
திரைத்துறையில் இதுவரைக்குமாய் அனுபவித்து வந்த நம்பிவந்த மோசங்களை மறுதலித்து புதிய சிந்தனைக்குத் திரும்புவதற்கு வழிகாட்டுதல்களே முதற்கண் தேவை. இதனால், சத்யஜித்ராய் குறித்து பன்முகத் தன்மையோடு ஓர் சிறு தொகுப்பை உருவாக்க முற்பட்டதாக ஆசிரியர், பொன்விஜயன் கூறுகின்றார்.
இந்தப் புத்தகத்தில் சத்யஜித்ராய் எழுதிய, மிஸ்டர் ப்ரெளனின் மாளிகை, இரண்டு மந்திரவாதிகள் ஆகிய இரு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன
.
அபுர் சன்ஸார் ( திரைக்கதை வடிவம் ) , கிறிஸ்டியன் பிராட் தாம்ஸனுக்கு சத்யஜித்ரே தனது அரசியல் படங்கள் குறித்து அளித்த பேட்டி,
ஸ்கிரிப்ட் எழுதுதல் குறித்த கட்டுரை, தாகூரின் சாந்திநிகேதனில் செலவிடப்பட்ட வாழ்வின் வெளிப்பாடுகள் ஆகியவையும் ஆசிரியரால் தொகுக்கப்பட்டுள்ளது.,
அபுர் சன்ஸார் ( திரைக்கதை வடிவம் ) , கிறிஸ்டியன் பிராட் தாம்ஸனுக்கு சத்யஜித்ரே தனது அரசியல் படங்கள் குறித்து அளித்த பேட்டி,
ஸ்கிரிப்ட் எழுதுதல் குறித்த கட்டுரை, தாகூரின் சாந்திநிகேதனில் செலவிடப்பட்ட வாழ்வின் வெளிப்பாடுகள் ஆகியவையும் ஆசிரியரால் தொகுக்கப்பட்டுள்ளது.,
இந்தியத் திரைப்படத்துறையின் பிதாமகன் சத்யஜித்ராய் 31 முழு நீளத் திரைப்படங்களையும், ஐந்து ஆவணப் படங்களையும் இயக்கியுள்ளார். விபரங்களைத் தனி வலைபதிவில் பார்க்கலாம்.
--------------------------------------------------------------------------------------------------------------
Ray received many major awards in his career, including 32 Indian National Film Awards, a number of awards at international film festivals and award ceremonies, and an Academy Award in 1992. The Government of India honoured him with the Bharat Ratna in 1992.
Born 2 May 1921, Calcutta, Bengal Presidency, British India
Died 23 April 1992 (aged 70),Calcutta, West Bengal, India
Occupation Film director, producer, screenwriter, writer, music director, lyricist
Years active 1950–1992
Spouse(s) Bijoya Das (m. 1949–1992)
-------------------------------------------------------------------------------------------------------------
இந்திய அரசு "பாரத ரத்னா" விருதை அவர் மருத்துவ மனையில் கோமா நிலையில் இருந்தபோதுதான் வழங்கியது என்பது வருத்தத்திற்குரிய செய்தி. அதே நேரத்தில் ஜே.ஆர்.டி.டாட்டாவிற்கும் "பாரத ரத்னா" விருது வழங்க்கப்பட்டது என்பதையும் குறிப்பிடவேண்டும். சுபாஷ் சந்திர போஸையும் அந்தப்பட்டியலில் சேர்க்க முற்பட்டதும் ஓர் கசப்பான அனுபவம்.
பல ஆண்டுகளுக்கு முன்பே கேன்ஸ், வெனிஸ், பெர்லின்- போன்ற இடங்களில் நிகழ்ந்த திரைப்பட விழாக்களில் பல பரிசுகளை வென்றிருக்கின்றார். அப்பரிசுகள் ஐரோப்பாவில் தந்ததால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. பின்னர், ஃபிரான்ஸ் ஜனாதிபதி கலகத்தாவிற்கே நேரடியாக வந்து ராயின் மார்பில் "லெஜன் டி ஹானர்" பதக்கத்தை அணிவித்துச் சென்றார்.
இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாத மத்திய அரசு, அமெரிக்கா ஆஸ்கர் பரிசை, ரேவுக்கு வழங்கியவுடன், மருத்துவ மனையில் கோமா நிலையில் இருந்தவருக்கு, பாரத ரத்னாவை" வழங்கியது.
இவற்றை "மிகவும் குறுகிய லேபிள்களுடன் புதைக்கப்பட்டவர்" என்னும் தலைப்பில் உத்பல்தத் எழுதிய கட்டுரை ராஜன் பாபுவால் தமிழாக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
ஒரு மேதையின் ஆளுமை- நூலின் இன்னும் சில தகவல்கள் வேறு பதிவுகளில் வரும்
0 comments:
Post a Comment