“ |
புதன்கிழமை, 06 ஜூன் 2012 20:11 | |||
“பிரபாகரன் பற்றிப் பேசுவது ஈழம் பற்றிப் பேசுவது. வரலாறு நெடுகிலும் இழப்பையும், இடப்பெயர்வையும், தியாகத்தையும் தன்னகத்தே கொண்ட தமிழீழ மண்ணின் அடையாளம் - திருஉரு - பிரபாகரன். தமிழர் எழுச்சியின் பொருண்மை ‘வடிவம்‘ பற்றி - அந்த மாபெரும் மனிதரைப் பற்றி இந்நூல் பேசுகிறது.
உலக மயச் சூழலில் ஓர் ஒடுக்கப்பட்ட இனத்தின் உரிமைகளும் நியாயங்களும் கூட சரக்குகளாக்கப்பட்டு, பரிவர்த்தனை சந்தையில் விற்கப்படும் கூச்சலில் ஈழத்தில் நிகழ்ந்த பேரவலத்தின் ஓலம் உறைந்தே போனது. 40 ஆயிரம் பிணங்களின் மேலே நின்று கொண்டு எல்லாம் முடிந்து விட்டது என்ற தங்களின் ‘கவித்துவ நீதி‘யை ‘நடுநிலையாளர்கள்‘ கதைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அத்தனைக்கும் நடுவே, துரோகத்தால் சிதைந்து போன ஒரு தேசத்தின் ஆன்மா எழுப்பும் குரலும், இது சூழ்ச்சியல்ல; எழுச்சிக்கு முந்தைய கட்டம் என்ற நம்பிக்கையின் குரலும் நெடுமாறனின் எழுத்து வழியே கேட்கிறது, பெட்ரோகிராடிலிருந்து வெளிப்பட்ட ஜான் ரீடின் எழுத்தைப் போல!”
(1917இல் பெட்ரோகிராடுக்கு நேரடியாகச் சென்று ‘போல்ஷ்விக் (ரஷ்ய) புரட்சி‘யை நேரில் கண்டு, போராட்டத்தின் அங்கமாக நின்று ‘உலகைக் குலுக்கிய 10 நாட்கள்‘ என்ற நூலை எழுதியவர் அமெரிக்க கம்யூனிஸ்டான ஜான் ரீட்)
- மருத்துவர் தாயப்பன்
“பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்”
1,223 பக்கங்கள் + 32 பக்கங்களில் வண்ணப்படங்கள்
நூலின் விலை - இந்தியாவில் - ரூ.800 (அஞ்சலில் பெற விரும்புபவர்களுக்கு நூல் எமது செலவில் அனுப்பி வைக்கப்படும் ) வெளிநாடுகளுக்கு - 25 Euro (அஞ்சல் செலவு உட்பட) தமிழ்க்குலம் பதிப்பாலயம் 8/140, டிப்போலைன் சி. பல்லாவரம் சென்னை - 600043 தொலைபேசி - 044-2264-0451 8/140, Dippoline, C. Pallavaram Chennai - 600043 Phone - 91-44-2264-0451
ஒரே ஆண்டில் நான்கு பதிப்புகள் கண்ட நூல். புதிய நான்காம் பதிப்பு விற்பனையில் உள்ளது.
|
0 comments:
Post a Comment