20 நாள் பி.எஸ்.என்.எல். மேளா தொடங்கியது
சென்னையில் 20 நாள்கள் நடைபெறும் பி.எஸ்.என்.எல். மேளா எனப்படும் குறைந்த விலை சேவை வழங்கும் திட்டம் திங்கள்கிழமை சென்னையில் தொடங்கியது.
பி.எஸ்.என்.எல். சென்னை வட்டத்தின் சார்பில் இந்த மேளா நடத்தப்படுகிறது. இதனை பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் ஏ. பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
திங்கள்கிழமை (அக்டோபர் 21) முதல் தொடர்ந்து 20 நாள்களுக்கு நடைபெறும் இந்த மேளாவில், பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் சேவை, செல்போன் சேவை மற்றும் பிராட்பேன்ட் சேவை ஆகியவை சலுகை விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.
மேலும் ரூ. 20 மதிப்புள்ள சிம்கார்டு இலவசமாக, ரூ. 20 டாக் டைமுடன் வழங்கப்படும். இந்த சலுகை இந்த 20 நாள்களுக்கு மட்டுமே கிடைக்கும். லேண்ட் லைன் இணைப்பு வழங்கும் போது, இணைப்புக் கட்டணத்தில் இருந்து ரூ. 250 தள்ளுபடி செய்யப்படும். மேலும் இதுபோன்ற பல்வேறு சலுகைகள் இந்த மேளாவில் அளிக்கப்படவுள்ளது.
இது குறித்து ஏ. பாலசுப்பிரமணியன் கூறும்போது, பி.எஸ்.என்.எல். அங்கீகரித்துள்ள 45 விற்பனை மையங்களில் இந்த மேளா நடைபெறும். இதனை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இப்போது சென்னையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் 8 லட்சம் லேண்ட் லைன் இணைப்புகளையும், 15 செல்போன் இணைப்புகளையும் வழங்கியுள்ளது. அதேவேளையில் பி.எஸ்.என்.எல். பிராட்பேன்ட் சேவையின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனை உயர்த்த முயற்சிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
தினமணி - 22 - 10 -2013
0 comments:
Post a Comment