"வாய்மையே வெல்லும்" என்பதை வடமொழி இலக்கணப்படி எழுத
வேண்டுமானால் "சத்யைவ ஜயதே" என்றுதான் எழுத வேண்டும்.
"தூய்மையே வெல்லும்" என்று எழுதினால் என்ன ?
பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்
தமிழன் தொட்டு எடுத்த பிஞ்ச்சு மலைக்கல் ஈராயிரம் ஆண்டுகள் நடந்து வந்த
பெரும்பாட்டையில் எத்தனையோ வடிவப் புரிதல்கள், வரலாற்று எச்சங்கள்.!
அவன் புழங்கிய தமிழ்ச் சொற்களின் தொகுப்பில் சிறு பகுதியாக நூற்றைம்பது சொற்களை மட்டும் இக்கட்டுரை பதிவு செய்கிறது. இச்சொற்கள் முறைப்படுத்தப்பட்டால் ஓராயிரம் தேறும்.
பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்
வெளிக்கருவில் பதிவாகியுள்ள பெருந்தச்சர்கள் பயன்படுத்தும் 150 சொற்கள்l
கால் புறவாய், களத்தி, நாவடை, கரிப்பு, தூக்கோடு, எழுதகம், ஏறுசாலை,
கையுறுவி, வயிரங்க்கம், சட்டத் தலை, வரி, வசம், வருக்கை, கூறு, பத்தி,
பாந்து, பத்திரிப்பு, குறடு, தளவரிசை, ஒருகாற் படை, இருகாற் படை, வளர்த்தி,
திகட்டு, பிரிவு, பருமன், வாங்கு வாளம், வரிவாளம், ஆய்ச்சல், அலையம்,
அலுங்கு, ஆளாங்கு, மையப்பிரளி, எதிர்ப்பாய்ச்சல், அடை, முட்டடை,
நழுக்கடை, கம்பி, கைக்கம்பி, கண்டு, மையம், பதம், கனம், அங்கனம்,
அரங்கம், கல்லூரி கை, மேழிப்பத்தி, வாயில், கோயில், ஞாயில், கருவில்,
அணிவொட்டிக்கால், பிள்ளைக்கால், போதிகை, வீரகண்டம், இடைக்கட்டு,
கண்டிப்பு, படங்கு, உத்தரம், உத்தரக்குட்டம், உத்தரக் கித்தாரி, பாவு கல், அரிச்ச
பாவுகல், நாணுதல், பரு நூல், பொடி நூல், எசை நூல், சோட்டு நூல், மகர
எசை, மாற்றான் எசை, வெட்டுக் கரி, முனைகரி, பத்தி மட்டை, தானக் குச்சி,
வெட்டரைவை, ஒத்த வெட்டரைவை, காவிக்குச்சி, அரவு, விரிசல், ஓட்டை,
பக்கு, பளிங்கு, பட்டம், சாரை, தேரை, பிளவு, கோடி மட்டம், வட்டுக் குண்டு,
வெட்ட்ட்டடி, கொத்து மேனி, தீர்மானம், சேர்மானம், கதுவுதல், நணுவுதல்,
தேர்க்கால், கடைகால், மண்மீறி, புதைவடை, மலையடி,
மலைப்பிளவு, கீறல், முறித்தல், கழித்தல், முனையரம், போக்குதல்,
கோடிக்கல், மஞ்ச்சிக்கல், கண்டிக்கல், சதுரிப்பு, சகடம், மேல்மட்டம்,
நெற்றி, புறத்தி, எசை, எசைப்பருமன், நிமிந்தம், நிலைமை, பகை, ஆரம்,
ஆரப்பாட்டு, வெட்டி வைத்தல், வீசி வைத்தல், நீளம் போடல், இழுத்தல்,
நடத்தல், நீள உளி, கட்டை உளி, பல முனை, கூருளி, துளைமுனை உளி,
அரப்பாசம், உளிப்பட்டறை, விலக்கு, வெட்டு விலக்கு, சுரைக் குறடு, கம்பிக்
குறடு, துவைச்சல், கடுந் துவைச்சல், துவச்சல் பட்டறை,
சம்மட்டி, சுத்தியல், ஒத்தைக்கண் சுத்தியல், உளித்தட்டி, நீள உடையாப்பு,
கட்டை உடையாப்பு, உளி உடையாப்பு, போக்கு, பெரு அடி, பெருங்க்கொத்து,
கமனம்
சில சொற்களுக்கான விளக்கம் இன்னொரு பதிவில். ஆர்வலர் வருக.
செயல் முறைகள்
01. நூல் மடித்தல்
02. மட்டம் மாவளித்தல்
02. மூலை நூல் ஒவ்வுதல்
04. எழுதியடித்தல்
05. அரைச் சிவப்பு
06. முழுக்கால் வேலை
07. அரைக்கால் வேலை
08. உத்தர முட்டி வேலை
09. அடங்கல்
10. சஞ்சாயம்
0 comments:
Post a Comment