"ஸ்தபதி" - என்ற சொல் "பெருந்தச்சன்" -ஆக்கப்படவேண்டும் என்கின்றார்
7-ஆண்டுகள் மாமல்லபுரம் சிற்பக் கல்லூரியில் பயின்று முதற்பரிசாகத்
தங்கப்பதக்கம் பெற்ற பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் அவர்கள் !
கல், கருங்கல், பிஞ்சு மலைக்கல், நன்னிக்கல் என்று வகைப்படுத்திப் பார்த்தான் வரலாற்றுக் காலத் தமிழன்.உரிய தொழில் நுட்பம் வளராமையினாலும், பெrருந்திரளான மக்களின் பங்களிப்பு இருக்காது என்பதாலும், நன்னக் கல்லைத் தவிர்த்துவிட்டான்.
பிஞ்சுமலைக் கல்லைத் தேர்வு செய்து கையாளத் தலைப்பட்டான். ஈராயிரம் ஆண்டுகள் தொடர்பு அறுபடாத தொழில் மரபை இழுத்து வந்து விட்டான்.
தொழில் நுட்பம் வளர்ந்த இந்தத் தலைமுறையும் பிஞ்ச்சுமலைகல்லைத் தொட்டுப் பார்த்தது. சாலை போடுகிற சல்லிக்காகவும், கற்காரையிடுவதற்காகவும் என்று ஒதுக்கி வைத்து விட்டது.
நன்னக்கல்லையும் தொட்டுப்பார்த்து, வண்ணக் கற்களென்று அழைத்தது. வயிரத் தகடு கொண்டு அறுத்தும், ஆட்டு மயிர் கொண்டு மெருகேற்றியும் பார்த்தது. வெளி உலகச் சந்தை திறந்து கொண்டது.
புலிவரிக் கல் முதல் பூனைக்கண் கல் வரை நூற்றுக்கும் மேற்பட்ட தீப்பாறை வளம் கொண்ட தமிழகம் இவற்றைக் கொண்டு என்ன செய்யலாம் என்று சிந்திக்கவில்லை. எப்படிக் காசாக்கலாம் என்று மட்டும் எண்ணிப்பார்த்தது.
பேராசை பிடித்தவன் அறுக்கத் தொடங்க்கிவிட்டான் எனத் தெரிந்ததும், வயிரத் தகடுகளின் விலையை ஏற்றி, தனித்த தொழில் நுட்பத்தோடு தகடு செய்து விற்றே காசு பார்த்துவிட்டான், சீனன்.
அறுக்கமாட்டாத தமிழன் தோண்டி விற்கத் தலைப்பட்டான். தமிழக அரசு கனிம வளத்துறையை ஏற்படுத்தி மலையடிகளைப் பட்டியலிட்டு வகைப்படுத்தி வருவாய் ஈட்டியது.
வண்ணக் கற்களற்ற வரிக்கல் மலையடிகள் எல்லாம் குண்டுக்கல் பட்டியலில் பொது ஏலத்தில் விடப்பட்டன. ஈராயிரம் ஆண்டு கருங்கல்லில் தொழில் மரபை ஆண்டவன் சாலைபோடும் சல்லிக்கற்களின் பட்டியலில் தனது கருங்க்கல் சேர்ந்ததைக்கூட அறியாமலிருக்கின்றான்.
வெளிநாட்டில் வலம் வந்த கருப்புத் தங்க்கம், முகவரி அட்டைக்கனத்துக்கு அறுத்து மெறுகேற்றப்பட்ட காலம் படிப்படியாக மாறியது. கருத்த பொருளின் மெருகு நாளடைவில் வெள்ளையனுக்கு வெறுப்பை ஏற்படுத்திவிட்டது. சந்தை சரிந்தது. நூற்றுக் கணக்கில் ஆலைகளைத் திறந்து வைத்துக் காத்திருந்தோரைத் தேடி வந்தோரெல்லாம் வெள்ளைக்கார வெட்டியான்களே ! ( Funeral Directors )
இழவுக்கும், அதனைத் தொடர்ந்த காடாற்றுதலுக்கும், அதனைத் தொடர்ந்த கல்லெடுப்புக்கும் உரியதெனக் கருதப்பட்ட கல் இருபதே ஆண்டுகளில் உலகைச் சுற்றி வந்து வெள்ளையன் கல்லெடுப்புக்குப் பயன்பட்டதோடு முட்டி நின்றது. - 150 புதிய சொற்கள் ! இன்னொரு பதிவில் காண்க.
0 comments:
Post a Comment