இந்நூலில் உயிரெழுத்துகளைக் கொண்டு அகர வரிசையில் ஓர் அற்புதமான பாடலை இயற்றியுள்ளார். இதில் திருமால் அருள்பாலிக்கும் திருத்தலங்களைப் பற்றியும் அவனுடைய திருப்பெயர்களின் மகிமையைப் பற்றியும் விரித்துரைத்துள்ளார். அந்த அகர வரிசைப் பாடல் வருமாறு:
அ ரங்க மாளிகைக் கருங்கடல் வண்ணனை
ஆ லிமா முகிலை வாலி காலனை
இ ந்த ளூருறை எந்தைபெம் மானை
ஈ சன் நான்முகன் வாசவன் தலைவனை
உ ள்ளுவார் உள்ளத் துள்ளுறை சோதியை
ஊ ரகம் நின்றருள் நீரகத் தடிகளை
எ வ்வுள் மாயனைத் தெய்வநா யகனை
ஏ ர்மலி சிகரத்து நீர்மலை ஆதியை
ஐ வாய் அரவில் அறிதுயில் அமலனை
ஒ ருகால் மொழியினும் ஒழிகுவை நெஞ்சே!
ஓ தநீர் ஞாலத் துழலும்
ஒü வியப் பிறப்பில் அழுந்தி வாடுவதே!
முதல் பாராவைப் படித்தல் அவசியமாகின்றது..
நன்றி :- தமிழ்மணி, தினமணி, 14-07-2013
0 comments:
Post a Comment