தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழு இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு வென்ற திருச்சியைச் சேர்ந்த எல்.சுப்ரமணியனின் பெயரில் சிறுகதை எழுதிய அவரது மகள் கலைச்செல்விக்குப் பரிசு, சான்றிதழை வழங்குகிறார் என்.எல்.சி. சுரங்க முதன்மைப் பொதுமேலாளர் சையத் அப்துல் பதேக் காலித் (வலது கோடி). உடன் (வலமிருந்து) "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன். எழுத்தாளர் மருதூர் அரங்கராசன்.
இரண்டாம் பரிசு வென்ற தஞ்சை வடபாதிமங்கலத்தைச் சேர்ந்த ஆர்.லதா.
சிறுகதைப் போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசளிப்பு
தினமணி-நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழு இணைந்து
நடத்திய சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு "தினமணி' ஆசிரியர்
கே.வைத்தியநாதன், சனிக்கிழமை நடந்த புத்தகக் கண்காட்சி விழாவின்போது
பரிசுகளையும் சான்றிதழையும் வழங்கி கெüரவித்தார்.
16-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சி நெய்வேலி லிக்னைட் ஹால் வளாகத்தில்
ஜூலை 5-ஆம் தொடங்கி ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜூலை 14) முடிவடைகிறது.
கடந்த 15 ஆண்டுகளாக நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவுடன் இணைந்து
"தினமணி' நாளிதழ் சிறுகதை எழுத்தாளர்களின் சிந்தனைத் திறனை வெளியுலகுக்கு
அறிமுகப்படுத்தும்விதமாக சிறுகதைப் போட்டிகளை நடத்தி, புத்தகக் கண்காட்சி
விழாவின்போது பரிசுகளை வழங்கிவருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான சிறுகதைப் போட்டியில் தமிழகம்
முழுவதிலுமிருந்து ஏராளமான சிறுகதை எழுத்தாளர்கள் பங்கேற்றனர். போட்டியில்
பங்கேற்ற சிறுகதைகளில் பரிசுக்குரிய சிறுகதைகளை "தினமணி கதிர்' ஆசிரியர்
குழுவினர் தேர்வு செய்தனர்.
போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி
சனிக்கிழமை லிக்னைட் ஹாலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு என்.எல்.சி. சுரங்க
முதன்மைப் பொது மேலாளர் சையத் அப்துல் பதேக் காலித் தலைமை வகித்தார்.
அதைத்
தொடர்ந்து நிகழ்வில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்ட "தினமணி' ஆசிரியர்
கே.வைத்தியநாதன்,
இந்த ஆண்டுக்கான சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற
"வலி' என்ற சிறுகதையை திருச்சி எல்.சுப்ரமணியனின் பெயரில் எழுதிய அவரது
மகள் கலைச்செல்வி,
2-ஆம் பரிசு பெற்ற "பிரிகூலி' எனும் சிறுகதை எழுதிய
திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலத்தைச் சேர்ந்த ஆர்.லதா,
3-ஆம் பரிசு பெற்ற
"ஏன் கலவரம்' என்ற சிறுகதையை எழுதிய செங்கல்பட்டைச் சேர்ந்த
பி.சுந்தர்ராஜன் ஆகியோருக்குப் பரிசுகளை வழங்கினார்.
இதுதவிர ஆறுதல் பரிசுகளை வென்ற (அடைப்புக்குறிக்குள் அவர்கள் எழுதிய
கதையின் தலைப்பு)
திருவாரூர் மாவட்டம் விட்டுக்கட்டி ப.முகைதீன் சேக்தாவூது
(எதிர்வினை),
மதுரை சி.பன்னீர்செல்வம் (தொலைதூரத்து வெளிச்சம்),
திருச்சி
செம்பை முருகானந்தம் (முன்னினிது),
தஞ்சை கிருஷ்ணப்ரியா (துளிர்களும்
ஒருநாள் பழுக்கும்),
பொள்ளாச்சி கனகராஜன் (தன்மானம்)
ஆகியோரும்
நிகழ்ச்சியில் கெளரவிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து தினமொரு எழுத்தாளர் கெüரவிக்கப்படும் வரிசையில் மருதூர்
அரங்கராசனும்,
தினமொரு பதிப்பகத்தார் கெüரவிக்கப்படும் வரிசையில் நன்மொழிப்
பதிப்பகத்தாரும் கெüரவிக்கப்பட்டனர்.
தினமொரு நூல் வெளியிடப்படும்
வரிசையில் நெய்வேலி எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு நூல்
வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து திரைப்பட நடிகர் கிரேஸி மோகனின்
நகைச்சுவை நாடகம் நடைபெற்றது.
நன்றி :- தினமணி, 14-07-2013
0 comments:
Post a Comment