ஸாரே ஜகா(ன்)(ஸே) அச்சா(ஹ்)
ஹிந்துஸ்தா(ந்) ஹமாரா
ஹம் புல்புலே(ன்) ஹை(ன்) உஸ்கி
ஏ குலிஸ்தா(ன்) ஹமாரா -
என்று துவங்கும் இந்தப் பாடல் நமது நாட்டின் முதல் பிரதமரான நேருஜிக்கு மிகவும் பிடித்தமான பாடல். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இந்தப் பாடலை நேருஜி தவராமல் பயன்படுத்துவார்.
இப்பாடலின் பொருள்:-
உலகம் யாவினும் சிறந்தது எங்கள் ஹிந்துஸ்தான் : இந்தப் பூந்தோட்டம் எங்க்களுடையது. நாங்கள் இதன் புல்புல்கள்.
( ஒரு வகைப் பறவை );
இந்தப் பாடலை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். ஆனால் இந்திய நாடாளுமன்றத்தில் பாடப்பெற்ற முதல்பாடல் என்ற உண்மை பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்ல. மேலும் இதனை இயற்றியவர் யார் தெரியுமா? அவர்தான், அல்லாமா இக்பால், என்ற திருபெயருடையவர்.
அல்லாமா ஸர் முஹம்மது இக்பால் இந்தியநாடு ஈன்றெடுத்த தவப்புதல்வர். கவிஞர் மட்டுமல்ல.: தத்துவ ஞானி; அரசியல் மேதை: சிறந்த கலைஞர்: வழக்கறிஞர்: சிந்தனையாளர்: அவருடைய கவிதைகள் உலகப் புகழ் பெற்றவை.
அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய நாட்டின் நிலையை எண்ணிக் கண்ணீர் உகுத்து அவர் இசைத்த சோக கீதங்கள், கோடிக்கணக்கான பாரத மக்களை விழிப்புறச் செய்தன.
இவரின் முன்னோர்கள் காஷ்மீரைச் சேர்ந்த பிராமணர்கள். 17-ஆம் நூற்றாண்டில், அவருடைய முன்னோர் ஒருவர் இஸ்லாம் மதத்தைத் தழுவினார். அதன் பின்னர் அந்தக் குடும்பம் காஷ்மீரிலிருந்து வெளியேறி சியால்கோட் நகரில் வந்து குடியேறியது.
1873-ஆம் ஆண்டு பிப்ரவரி, 22, தேதி பிறந்த இவருக்கு அவரது பெற்றோர் இக்பால் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். இக்பால் என்றால் புகழ் என்று பொருள்.
"விளையும் பயிர் முளையிலே"
ஓர்நாள் பள்ளிக்கு இவர் தாமதமாகச் செல்ல, ஏன் தாமதம் என்று ஆசிரியர் வினாவெழுப்ப, "இக்பால்" ( புகழ் ) எப்போதும் தாமதமாகத்தான் வரும் என்று பதிலிறுத்து, ஆசிரியரின் பாராட்டைப் பெற்றார்.
"கவிதை செய்வதே எம் தொழில்" என்ற சித்தாந்தம் இக்பாலின் பள்ளிப்படிப்புடனேயே வளர்ந்துவிட்டது.
( நமக்குத் தொழில் கவிதை: நாட்டிற்குழைத்தல் - மகாகவி பாரதி )
இங்கிலாந்து சென்று சட்டம் பயின்றபோதும் கவிதையை விடவில்லை. ( அணு உலை அறிவியலாளர் மதுரை ஜெயபாரதனுக்கு வயது 79. கனடாவில் உள்ளார். அறிவியல் உண்மைகளைத் தமிழில் விரிவாகத் தொடர்ந்து இணைய தளங்களில் எழுதி வருகின்றார். இணைய அன்பர்கள் "நெஞ்சின் அலைகள்" செல்க.)
மேலை நாட்டு நாகரீகத்தில் நீங்காத வெறுப்புக் கொண்டவர், இக்பால். ஏழைகளை வதைப்போரைத் தங்கவிதைகளால் சாடுகின்றார்.
பயனுள்ள தம் வாழ்வில் இயற்றிய அமரப் படைப்புக்களை நமக்கு அருளிய அல்லாமா இக்பால் 1836 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-தேதி இறையளவில் சேர்ந்தார்.
பிரேமா பிரசுரம்,சென்னை-24, ( e-mail aruram@md2 vsnl.net.in ) 1962 மே, 1967 ஜூன், 1979 ஜூலை, 1997 நவம்பர், 2003 செப்டம்பர் என ஐந்து பதிப்புக்களைவெளியிட்டுள்ளது. இதற்குப் பின்னரும் பதிப்புக்கள் வந்திருக்கக் கூடும்.
50 பக்கங்களுடையது இந்நூல். " அல்லாமா இக்பால் பொன்மொழிகள்" என்பதே நூலின் தலைப்பு. இநூலைத் தொகுத்திடப் பயன்பட்ட 5 ஆங்கில நூல்களின் பெயர்களையும் நூலின் இறுதியில் பட்டியலிட்டுள்ளார்.,
தொகுப்பாசிரியர் ஏ.எம்.மீரான்.
இன்று 55-60 வயதுக்கு மேற்பட்டோருக்கு அரு இராமநாதன் நன்கு அறிமுகமானவர்தான், இந்த நூலை வெளியிட்டவர்.. அவர் நடத்திய "காதல்" மாத இதழ் அன்று பிரபலம். நல்லவிதத்தில்தான்! பிறநாட்டு சாத்திரங்களையும், பெரியோர் வரலாற்றையும் தமிழுக்கு மிக மிகக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்திய பெருமையும் அரு.இராமநாதனுக்கு உண்டு. நடைபாதைக் கடைகளில், அரு.இராமநாதன் என்ற பெயர் போட்ட புத்தகங்கள் கிடைத்தால் தவறாமல் வாங்கி விடுங்கள். அத்தனையும் தமிழ்ப் பெட்டகங்கள். அப்படி ரு,5/-க்கு வாங்க்கப்பட்டதுதான் இந்தப் புத்தகம்.
இக்பாலின் பொன்மொழிகளில் சில :-
01.இறை வணக்கம் :-
அக ஒளி. :இறைவனே ! என் மார்பினுள் எல்லாம் தெரிந்த ஓர் இதயத்தைத் தந்தருள்..
அகம் :- நெஞ்சில் ஒளியுண்டானால் சொல்லில் உணர்ச்சியும் வாழ்க்கையில் ஒழுங்கும் உண்டாகும்.
02. அரசியலில் மதம்:-
மன்னராட்சியானாலும், மக்களாட்சியானாலும் அரசியலிலிருந்து மதம் பிரிந்து விட்டால் அதில் செங்கிஸ்கான்மைதான் எஞ்சியிருக்கும்.
03. அறிவு:-
வாழ்வைப் பாதுகாக்கும் ஆயுதம் அறிவு. அகத்தை வளர்ப்பதற்கான கருவியும் அதுதான்.
04. குலப்பெருமை:-
குலப்பெருமை பேசுவது தவறு. அது உடலோடு உறவு கொள்ளக் கூடியது. உடலோ அழியும் தன்மை வாய்ந்தது.
05. நிறவேற்றுமை :
-
அரேபியா நிறவேற்றுமை பாராட்டுகிறதா? அப்படியானால் அதையும் ஒதுக்கித் தள்ளு.
06. பணிவு :-
இறைவனிடமுள்ள இல்லத்தில் இன்புற வேண்டுமானால் பாராமுகமாயிருப்பவனே, பணிவாக நடக்க முயற்சி செய்.
கட்டுப்பாட்டின் கனிதான் சுதந்திரம். பணிவின் மூலம் அற்பனும் கனவானாகி விடுகிறான்.
ஆட்டை அழிப்பதில் ஆனந்தங்கொள்ளும் புலிக்கூட்டமே உன் ஆத்மாவைக் கொல். சிறப்படைவாய். உன்பலம் மிகுதியினால் நீ காலடியிட்டு புல்லை நக்கினாலும் அது மீண்டும் வளர்கிறது.
07. தன் பார்வை :-
மலர்ச் சோலைக்காட்சி கட்டாயம் பார்க்க வேண்டியதுதான். ஆனால் அதை அன்னியனின் கண்களோடு பார்க்காதே.
உன் பார்வை பரிசுத்தமாக இல்லாதவரை உன் அம்பு தனது இலக்கை எட்ட இயலாது.
நன்றி:- பிரேமா பிரசுரம், சென்னை-600 24
வணக்கம் ஐயா. தங்கள் தளத்தில் என் பதிவினைக் கண்டு அடைந்திட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. நன்றி ஐயா.
ReplyDeleteதங்கள் தளத்தில் Followers Gadget இணைப்பீர்களேயானால் தொடருவதற்கு வசதியாக இருக்கும் ஐயா.