தரங்கம்பாடி டேனிஷ் கோட்டைக்கு
எதிர்புறம் கடல் நீர்
உள்வாங்கியதால் தெரியும் மணல் திட்டு.
நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் கடல் சனிக்கிழமை அதிகளவில் உள்வாங்கியது.
பொதுவாக தரங்கம்பாடி டேனிஷ் கோட்டைக்கு மிக அருகில் வரை கடல் நீர் இருக்கும். ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சில சமயம் கடல் நீர் உள்வாங்குவது வழக்கம். ஆனால் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக சுமார் 10 மீட்டர் தொலைவுக்கும் மேலாக கடல் நீர் உள்வாங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அண்மைக் காலங்களில் இதுபோல இருந்ததில்லையாம்.
கோட்டைக்கு எதிர்புறம் இருக்கும் சிதிலமடைந்த மதில் சுவர்களைச் சுற்றி அதிகமான நீர் இருக்கும். இங்கு சுற்றுலா வருவோர் இந்தச் சுவர்களின் மேல் ஏறித்தான் நடக்க முடியுமே தவிர கீழே இறங்க முடியாது. ஆனால் தற்போது சுவர்களைச் சுற்றிலும் மணல் தெரிகிறது. மேலும் நீரில் மூழ்கியிருந்த சுவற்றின் இடிபாடுகளும் தெரிகின்றன. இதனால் கோட்டையின் எதிர்புறமும் இதுவரை நீர் இருந்த பகுதிகள் மணல் மேடாகக் காட்சியளிக்கிறது.
நன்றி :- தினமணி, 04-08-2013
0 comments:
Post a Comment