என்னை விட்டு நீங்க்காமல் என்னிடத்து நீயிருக்க
உன்னை விட்டு நீங்க்காது ஒருப்படுவது எக்காலம்? ( 159 )
உண்டதும் மாதருடன் ஊடிச் சேர்ந்து இன்பமெலாம்
கண்டதுவும் நீயெனவே கண்டு கொள்வது எக்காலம் ? ( 187 )
விளங்கு கின்ற தாரகையை வெய்யோன் மறைத் தாற்போல்
களங்கமற்ற உங்காட்சி கண்டறிவது எக்காலம் ? ( 229 )
எண்ணாத தூரமெலாம் எண்ணி எண்ணிப் பாராமல்
கண்ணாடிக் குள் ஒளிபோல் கண்டறிவது எக்காலம் ? ( 103 )
அடர்ந்த மனக் காட்டை அஞ்ச்செழுத்தாம் வாளாலே
தொடர்ந்து தொடர்ந்து வெட்டிச் சுடுவதினி எக்காலம் ? ( 83 )
அப்புப் பிறை நடுவே அமர்ந்திருந்த விட்டுணவை
உப்புக் குடுக்கை யுளே உணர்ந்தறிவது எக்காலம் ? ( 68 )
தொகுப்பு :- "தெய்வ அலை" - "தெய்வீக அலை"
செங்கைப் பொதுவன், புலவர், முனைவர்,.M.A. M.Ed. Ph.D.
வீடு 22, , 13, தில்லை கங்கா நகர், சென்னை- 600 061.
வெளியீடு - வசந்தா பதிப்பகம், ,மனை எண் 9, கதவு எண் 26,
ஜோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை- 600 088.
044- 2231 1819, 044- 2253 3667
அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நூல் ஐயா. அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. வாங்கிப் படிக்கின்றேன்
ReplyDelete