தமிழ் விக்கிப்பீடியாவிற்கு அஸ்திவாரமிட்ட முதல்வர்
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து துபாயில்
கடந்த 20 ஆண்டுகளாக வசித்துவரும்
கட்டிடக்கலைப் பொறியாளர்
மயூரநாதன்
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து துபாயில்
கடந்த 20 ஆண்டுகளாக வசித்துவரும்
கட்டிடக்கலைப் பொறியாளர்
மயூரநாதன்
-----------------------------------------------------------------------------------------------------------------
தமிழ் விக்கிப்பீடியா, விக்கிப்பீடியா கலைக் களஞ்சியத்தின் தமிழ் மொழி
பதிப்பு ஆகும்[1]. செப்டம்பர் 2003ல் இது தொடங்கப்பட்டது. 2009, நவம்பர்
மாதம் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை இருபதாயிரத்தை தாண்டியது[2]. ஏனைய மொழி
விக்கிப்பீடியா கட்டுரைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், 2012 சனவரி
மாதக் கணிப்பின் படி தமிழ் விக்கிப்பீடியாவின் 59வது இடத்தில் உள்ளது.[3]
தமிழ் விக்கியில் இன்று வரை மொத்தம் 51,260 கட்டுரைகள் உள்ளன. இந்திய மொழி
விக்கிகளில் மூன்றாவது இடத்திலும், திராவிட மொழி விக்கிகளில் இரண்டாவது
இடத்திலும் தமிழ் விக்கி உள்ளது. குறைந்தது 250 எழுத்துகள் கொண்ட
கட்டுரைகள் என்று பார்த்தால், இந்திய மொழிகளுள் தமிழ் இரண்டாவதாக உள்ளது.
வரலாற்று நோக்கில் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியை இந்திய மொழி
விக்கிகளின் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்க்க இந்திய மொழிகள் விக்கி
ஒப்பீடு என்னும் பக்கத்தைக் காணவும்.பொருளடக்கம்
1 தமிழ் விக்கிப்பீடியா குறித்த தரவுகள்
2 இவற்றையும் பார்க்கவும்
3 மேற்கோள்கள்
4 வெளி இணைப்புகள்
தமிழ் விக்கிப்பீடியா குறித்த தரவுகள்
பக்கங்கள்= 1,41,898
கட்டுரைகள்= 51,260
கோப்புகள்= 8,713
தொகுப்புகள்= 13,71,133
பயனர்கள் = 47,579
சிறப்பு பங்களிப்பாளர்கள்= 249
தானியங்கிகள் = 93
நிருவாகிகள் = 29
அதிகாரிகள் = 4
Ind lang wiki.jpg
இவற்றையும் பார்க்கவும்
தமிழ் விக்கிப்பீடியாவின் மைல்கற்கள்
தமிழ் விக்கிப்பீடியா வரலாறு
Tamil Wikipedia: A Case Study - 2009 விக்கிமேனியா மாநாட்டில் பயனர் சுந்தரால் சமர்ப்பிக்கப்பட்டது
மேற்கோள்கள்
↑ http://www.hindu.com/mp/2009/05/21/stories/2009052150760100.htm
↑ http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#November_2009
↑ http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles
வெளி இணைப்புகள்
தமிழ் விக்கிப்பீடியா
தமிழ் விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிபரம்
----------------------------------------------------------------------------------------------------------------
சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில்
விக்கிபீடியாவின் 10-ஆம் ஆண்டுவிழா நேற்று 30-09-2013ஞாயிறு முழுவதும்
கோலாகலமாக நிகழ்ந்தது. அரங்கம் நிறைந்த கூட்டம். பங்கேற்றோரில்
பாதிக்கும் மேற்பட்டோர் இளைஞர்கள் என்பதும் ஓர் சிறப்பம்சம். கூட்டத்தில்
தமிழ்விக்கியை முதன் முதலில் எழுதத் துவங்கிய - அஸ்திவாரமிட்ட ஈழத்து
கட்டிடப் பொறியாளர், மயூரநாதன் ஆற்றிய உரையிலிருந்து ஓர் பகுதி
பின்வருமாறு :
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
அனைவருக்கும் வணக்கம் .
இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவன், நான்.. காலத்தின் கட்டாயத்தால் புலம் பெயர்ந்தவன். கட்டிடப் பொறியாளரான எமக்கு உலகிலேயே முதலாவதான கட்டிடக்கலை நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. ஆம்! கடந்த 20 ஆண்டுகளாகத் துபாயில் வாழ்க்கை தொடர்கின்றது. தமிழின்பால் கொண்ட ஈடுபாடும், துபாயில் கிடைத்த ஓய்வு நேரமும், ஆங்கில விக்கிபீடியாவின் தாக்கமும் தமிழ் விக்கியில் எழுதத் தூண்டியது.
எமக்கு IT குறித்த பயன்பாடு தெரியாது. இந்நிலையில் சுந்தர், IT பின்னணி கொண்டவரும் எம்முடன் தமிழ் விக்கி பணியில் இணந்து கொள்கின்றார். பின்னர் ரவி வருகின்றார். அவர் ஒரு செயல் வீரர். அவர் தமிழ் விக்கியில் எழுதிய கட்டுரைகளவிட, அவரது தூண்டுதலால் எழுதப்பட்ட கட்டுரைகள் 1000-க்கு மேல் இருக்கும்.
நக்கீரன், கனகு பின்னர் தமிழ் விக்கியில் இணைந்து அதன் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவி வருகின்றனர். அதன்பின் கனடாவில் வாழும் பேராசிரியர் செல்வகுமாரின் வருகையால் தமிழ் விக்கி பெரிதும் விரிந்து குறிப்பிடத்தக்க அளவில் உலகில் தமிழுக்கென்று ஓர் முகமும் ( அடையாளம் அல்லது முகவரி )கிடைத்தது.
தமிழ் விக்கியில் எழுதத் துவங்கியபோது, இந்திய மொழிகளில், சமஸ்கிருதம், மலையாளம், தெலுங்கு ஆகியவை விக்கிபீடியாவில் இடம்பெற்றிருந்தன, சமஸ்கிருதம்தான் முன்னணியில் நின்றது.
எழுதப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே முதல், இரண்டாம் இடங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. ஆனால் தரம் வாய்ந்த கட்டுரைகளே முக்கியம். தரமுள்ள கட்டுரைகள் தமிழில் அவதானமாகத்தான் ( குறைந்த அளவில்தான் ) இடம்பெற்று வந்தன. ,
ஆனால், உறுதியான விக்கிப்பீடியா சமூகத்தினரைத் தமிழர் உருவாக்கியுள்ளனர். 2010-க்குப்பின் சேர்ந்தோர் தரத்துடன் கூடிய அதிகக் கட்டுரைகளைப் பங்களிப்புச் செய்து தமிழ்க் கட்டுரைகளின் எண்ணிக்கையையும் உயர்த்தியுள்ளனர்.
இத்தொண்டில் ஈடுபடுவோருக்குப் பண அளவில் எந்த லாபமும் கிடையாது. உலகளாவிய நிலையில் விக்கிமீடியாவை கூட்டுமுயற்சியில் வளர்ப்பது குறித்த ஆய்வு ,பின்வரும் முடிவுகளைத் தருகின்றன.
01. விழுமியம் - VALUES - அறம் சார்ந்த செயல்களை வளர்த்தல்
02. சமூகம் சார்ந்த மனத் திருப்தி கிடைத்தல்.
03. புரிதல், சார்ந்த விஷயம் -கட்டற்ற தகவல்களை அறிந்து கொள்ளுதல்
04. தொழில் மேம்பாட்டிற்காக ஈடுபட்டு உழைத்தல்
உலகின் மிகப்பெரிய NO 1 நிறுவனத்தில் விக்கிபீடியாவிற்காக விடுமுறை எடுக்கும்பொழுது ஓர் பெருமிதம் ஏற்படுகின்றது. எல்லோரையும் திரும்பிப்பார்த்து யோசிக்க வைக்கின்றது. பாதுகாப்பு அம்சங்களுக்காகக்கூட விக்கியில் பங்கேற்க வருகின்றனர். அவரவர் திறமை வெளிப்படுவதோடு மகிழ்ச்சியும் கிடைக்கின்றது.
விக்கிப்பீடியா பயனர்களுக்கு குறிக்கோள் மிகவும் முக்கியமானது. கட்டற்ற முறையில் தமிழ்மொழி மூலமாக தமிழர்களின் அறிவு வளர்ச்சிக்கு தொடர் பங்களிப்புச் செய்து ஊக்குவித்து விக்கிப்பீடியா உலகளாவிய அளவில் உதவி வருகின்றது.
நோக்கம் - ஃFUN - மகிழ்ச்சி !
ஊடகத்தின் POWER -தமிழ் மிக முக்கியமானது. அறிவு மேம்பாட்டிற்காக என்பது மட்டுமல்ல. உள்ளாற்றலைப் புரிந்துகொண்டு செயல்படவும் விக்கிப்பீடியா ப்யனர்களுக்கும் -பயன்படுத்துவோருக்கும் உதவுகின்றது.
எழுதும்போது கலைச் சொற்கள் பெரும் பிரச்சினையாக உள்ளன. வெவ்வேறு நாடுகளிலும் பயன்படுத்தும் கலைச் சொற்களை ஒன்றாக்கும் பெரும்பொறுப்பு நமக்கு உள்ளது.
விக்கி[ப்பீடியா எல்லோருக்கும் ஒரு மையதளமாக அமையக்கூடும்.
இந்தியாவில் எழுதும் கட்டுரைகளில் உள்ள வார்த்தைகள் இலங்கையில் படிக்கும் மாணாக்கனுக்குப் புரியுமா ?
இந்தியப் பயன்பாட்டுச் சொல்லின் பொருளையும் விளக்க வேண்டும்.
இவற்றிற்கெல்லாம் எந்த அரசையும் அல்லது எந்த நிறுவனத்தையும் கேட்க வேண்டிய அவசியமில்லை.
நன்றி, வணக்கம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
விக்கிப்பீடியா 10-ஆம் ஆண்டு விழா நிகழ்வின் மாட்சிகளை எடுத்துரைக்க வார்த்தைகள் இல்லை. 29-09-2013
காலை 9 மணிமுதல் மாலை 5.30 மணிவரை நிகழ்ந்த கூட்டத்திற் பங்கேற்றோர் புத்துணர்ச்சி பெற்றுத் திரும்பினர் என்று ஒரே வார்த்தையில் மட்டும் இங்கு குறிப்பாகக் கூறலாம்.
இதர நிகழ்வுகள் கணினியில் இடம்பெற்றுள்ள பலரது வலைப்பூக்களில் - வலைத்தளங்களில்- இணையங்களில் முகநூல்களில் விரிவாகப் படங்களுடன் வெளிவரும்.
உள்ளூர் மற்றும் அயல்நாட்டில் வாழும் விக்கிப் பயனர்கள் 28-09-2013 மேற்கொண்ட மகாபலிபுரச் சுற்றுலாக் காட்சிகளையும் விரைவில் கண்டு மகிழலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------.
உருவாக்கிடும் நன்னோக்கில் , அமைப்புக்களை உருவாக்குவோம். வெற்றியும் ஈட்டுவோம். நாளை நமதே !
0 comments:
Post a Comment