அ.முத்துலிங்கம்
amuttu@gmail.com
அண்மையில் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ரொறொன்ரோவில் கம்பீரமான பொலீஸ்காரர் ஒருவரைச் சந்தித்தார். எதிர்பாராத சம்பவம் எப்போதாவது நடந்தது உண்டா என்று வினவினார். தினம் தினம் அப்படி ஒன்று நடக்கும் என்றார் பொலீஸ்காரர். "ஒரு ஆசிரியர். தன் மனைவி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி விட்டது குற்றமானது. வழக்கு நடக்கிறது. ஆசிரியருக்கு இதுவே முதல் குற்றம். அவர் தண்டனை பெற்று ஜெயிலுக்குச் சென்றால் குடும்பம் வருமானமின்றிச் சீரழியும். எனவே மன்னித்து விட்டுவிடலாம் என்பதே நிலை. அச்சூழலில் ஆசிரியர் பேசினார். குழந்தைகளுக்கு சமைத்து உணவு போடாததால்தான் எண்ணேயை மனைவி மீது ஊற்றினேன் என்று காரணத்தைக் கூறினார். தீர்ப்பு திசை மாறியது. இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை நீதிபதி வழங்கினார். நீங்க்கள் ஆங்கில ஆசிரியர். கனடாவின் அரசியல் சட்டத்தை முறையாகக் கற்றுக்கொள்ள இந்த இரண்டு ஆண்டுக்காலம் போதுமென்றும் கூறினார். சோமாலியாவைச் சேர்ந்த, கனடாவில் வசித்துவந்த ஆங்கில ஆசிரியருக்கு இத்தண்டனையும், நீதிபதியின் விளக்கமும் எதிர்பாராதது.
1990-இல் ஓர் வழக்கு. உலகமே அவ்வழக்கினை உன்னிப்பாகக் கவனித்து வந்தது. குற்றவாளியின் பெயர் போல் பெர்ணாடோ. 30 பெண்களுக்கு மேல் வல்லுறவு கொண்டவன். மூன்று பெண்களைக் கொலை செய்தவன். இதற்கு அவனது மனைவியும் உடந்தை. கணவன் பெண்களைச் சித்திரவதை செய்யும்போது மனைவி அதை வீடியோ படம் எடுத்தாள். மனைவி செய்தபோது கணவன் வீடியோ படம் எடுத்தான். ஓய்வாக இருக்கும் சமயங்களில் இருவரும் கொடூரமான வீடியோக்களைக் கண்டுகளித்தனர்.
பெர்னாடோவைத் தினமும் நீதிமன்றத்துக்கு அழைத்துவரும் பொறுப்பு பொலீஸ்கார நண்பருக்கு. 1993-ஆம் வருடம் இவ்வழக்கு உச்சம் தொட்டது. தினமும் குற்றவாளி நீதிமன்றத்துக்கு வரும்பொழுது ஒரு குதிரை நடப்பதுபோலத் தலையைத் தொங்க்கப்போட்டுக்கொண்டுதான் நடப்பான். நீலக் கண்கள் ஒளிவீச , ஓர் அதிகாரிபோல சுற்றிலும் நோட்டம் விடுவான்.
எல்லோரும் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை நிச்சயம் என்று எதிர்பார்த்தனர். அந்த வருடம்தான் ரொறொன்றோ ப்ளூஜேஸ் அணி பேஸ்பால் இறுதிப் போட்டிக்குத் தயாரானது.அன்றையப் போட்டியில் உலகச் சாம்பியன் யாரென்பது தெரியவரும்.
நீதிமன்றத்தை நெருங்கியபோது பொலீஸ்காரரைக் குற்றவாளி "நாய்க்குப் பொறந்தவனே " என அழைத்தான்.அப்படி அழைத்தால் எல்லாம் சுமுகமாக இருக்கிறதென்று அர்த்தம்." SIR" என அழைத்தால்தான் ஆபத்து.
நாளைக்கு ப்ளூஜேஸ் அணியில் ஜோ கார்ட்டர் ஹோம் ரன் அடித்து வெற்ரி பெற்றுக் கொடுப்பானா? குற்றவாளிக்கு அது ஒன்றுதான் அன்றையக் கவலை. அடுத்த நாள் கடைசி நேரத்தில் ஹோம் ரன் அடித்து உலக சாம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொடுத்தது சரித்திரம். கனடிய நீதிமன்றங்க்களில் எதிர்பாராத சம்பவம் நிகழ்பெறுவது உண்டு.
ஏர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய சிறுகதையிலும் பாரெக்கச் சின்னதான ஒரு சிறுகதையைச் சமீபத்தில் ஓர் அமெரிக்க மாணவி எழுதியுள்ளார். ஐந்தே ஐந்து வார்த்தைகள்தான்.
"ஓ ! கடவுளே !நான் கர்ப்பமாகிவிட்டேன். யாராயிருக்கும் ?"
எதிர்பாராத சம்பவம் வாழ்க்கையைச் சில வேளைகளில் பின்னுக்குத் தள்ளும். சிலசமயம் முன்னுக்கு எடுத்துச் செல்லும். வாழ்க்கை பெண்டுலம்போலத்தான். முன்னுக்கும் பின்னுக்கும் நகர்வது.
தி இந்து - 27 - 09 - 2013
வாழ்க்கை என்பது பெண்டுலம்தான் ஐயா
ReplyDelete