பேராசிரியர் சுந்தரம்பிள்ளை இயற்றிய மனோன்மணியத்தில் உள்ள
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் !
"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"
1970ஆம் ஆண்டு தமிழக அரசு இப்பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது.
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதிற்
றக்கசிறு பிறைநுதலுந் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமு மதிற்சிறந்த திரவிடநற் றிருநாடும்
அத்திலக வாசனைபோ லனைத்துலகு மின்பமுற
எத்திசையும் புகழ்மணக்க விருந்தபெருந் தமிழணங்கே
தமிழணங்கே
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே
எனச் சுரப்படுத்தி எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார்.
ஆனால் கடந்த பல ஆண்டுகளாக, தமிழ் நாட்டுப் பாடநூல் கழகம் தயாரித்து வழங்கும் பள்ளிப் பாடநூல்களில், நீராருங் கடலுடுத்த பாடலின் மூன்றாவது மற்றும் நான்காவது வரிகள் இடம் மாறி அச்சிடப்படுகின்றன.
பாடப் புத்தகங்களில் தற்சமயம் இருக்கும் பாடல் பின்வருமாறு,
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதிற்
தெக்கணம மதிற்சிறந்த திரவிடற் றிருநாடும்
தக்கசிறு பிறைநுதலுந் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோ லனைத்துலகு மின்பமுற
எத்திசையும் புகழ்மணக்க விருந்தபெருந் தமிழணங்கே
தமிழணங்கே
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே
ஒரு பாடலின் வரிகளை இடம் மாற்றி அமைக்கும் உரிமை, அந்தப் பாடலினை எழுதியவருக்கு மட்டும்தான் உண்டு.
எனவே தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலின் மூன்று மற்றும் நான்காம் வரிகளை, சுந்தரம் பிள்ளை இயற்றிய வரிசையிலேயே அச்சிட வேண்டும், பாடப் பட வேண்டும் என்பதே தமழன்பர்கள் பலரது வேண்டுகோளாகும்.
0 comments:
Post a Comment