Home » » புதுவை நிர்வாகத்தில்பாரதிதாசனின தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் !

புதுவை நிர்வாகத்தில்பாரதிதாசனின தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் !


 Image

புதுச்சேரி அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட
தமிழ் வாழ்த்துப்பாடலை எழுதியவர்
பாரதிதாசன் ஆவார்.
இவர் எழுதிய இசை அமுது
என்னும் பாடல் தொகுப்பின்
இரண்டாம் பகுதியின் முதல் பாடல் இதுவாகும்


வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே!
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!

தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ?
தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ?

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!

முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி!

[url]http://ta.wikipedia.org/wiki/தமிழ்த்தாய்_வாழ்த்து[/url]

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger