திருச்சி:சென்னை செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் நேற்று இரவு 9.45 மணிக்கு வழக்கம் போல் திருச்சி வந்தது. 10 மணிக்கு ரயில் புறப்பட வேண்டும். ஆனால் புறப்படவில்லை.
இன்ஜின் டிரைவர்கள், கார்டுகள், ஆர்பிஎப் படை வீரர்கள், டிக்கெட் பரிசோதகர்கள் உள்ளிட்டோர், பணி சார்ந்த பொருட்களை ஒரு பெட்டியில் கொண்டு செல்வர். மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் டிரைவருக்கு வழங்கிய பெட்டி திடீரென மாயமானது.
அந்த பெட்டியில் டார்ச் லைட், பச்சை மற்றும் சிவப்பு நிற கொடிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இருந்தன. ரயில் நிலையத்தில் பல இடங்களில் தேடி பார்த்தும் பெட்டி கிடைக்கவில்லை. அவருக்கு மாற்றுப் பெட்டி வழங்கப்பட்டது.
இதனால் ரயில் 40 நிமிடங்கள் தாமதமாக 10.40க்கு புறப்பட்டது. இதையடுத்து, 10.20க்கு செல்ல வேண்டிய மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் 40 நிமிடம் தாமதமாக 11க்கும், 11க்கு செல்ல வேண்டிய ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் 11.20க்கும் புறப்பட்டு சென்றன.
மங்களூர் எக்ஸ்பிரஸ் இன்ஜின் டிரைவருக்கு வழங்கப்பட்ட பெட்டியை, ஊழியர் வேறு பிளாட்பாரத்துக்கு கொண்டு சென்றாரா அல்லது வேறு யாராவது ஆசாமிகள் சுருட்டி சென்றனரா என்று விசாரணை நடக்கிறது.
நன்றி - தமிழ்முரசு -10-09-2013
0 comments:
Post a Comment