Home » » மதுரா மாமனிதர் விருது 2013 - india@maduratravel.com

மதுரா மாமனிதர் விருது 2013 - india@maduratravel.com

இது வரை, 12 லட்சம் பேருக்கு உணவு வழங்கியுள்ள 

நாராயணன் கிருஷ்ணன், 

மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு, முடி வெட்டி, சவரம் செய்து, குளிக்க 

வைத்து, புத்தாடை அணிவித்து கவனித்தும் கொள்கிறார்.



‘மதுரா மாமனிதர் விருது’ 2013
சிறந்த மனிதநேய சேவை செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும்
‘மதுரா மாமனிதர் விருது’ ரூபாய் ஒரு இலட்சம் ‘மதுரா மாமனிதர் விருது’ ரூபாய் ஒரு இலட்சம் மதுரா நிறுவனத்தால்
வழங்கப்படுகிறது.


24-10-2013ம் அன்று வியாழக்கிழமை மாலை 400 மணிக்குஅக்ஷ்யா ஹோம்,
நாகாதீர்த்தம், மேலக்கால் ரோடு, கொடிமங்களம் கிராமம், மதுரையில்
இவ்விழா நடைபெற்றது.


இவ்விழாவில் மதுரா டிராவல் சர்வீஸ் (பி) லிட்., நிறுவனத்தின் தலைவர்
மற்றும் நிர்வாக இயக்குநர் ‘கலைமாமணி’ வீ.கே.டி.பாலன் அவர்கள்
அக்ஷ்யா டிரஸ்ட் நிறுவனர் திரு. நாராயணன் கிருஷ்ணன் அவர்களுக்கு
இவ்விருதினை வழங்கினார்கள்.


ஆயக்குடி அமர்சேவா சங்க நிறுவனத் தலைவர் திரு.எஸ்.இராமகிருஷ்ணன்
தலைமை தாங்கினார், அணைக்கும் கரங்கள் டிரஸ்ட் தலைவர்
டாக்டர்.எஸ்.டி.நோவா, வாழ்த்துரை வழங்கினார்கள்.


அக்ஷ்யா நிறுவனத்தின்  அக்ஷ்யா நிறுவனத்தின் பாராமரிப்பில் வாழும் 450க்கு மேற்பட்ட ஆண்,
பெண் மனநோயாளிகள் கலந்து கொண்டார்கள்.



இயலாதோருக்கு வாழ்வளிக்கும் நாராயணன் கிருஷ்ணன்
தினமும், 400 பேருக்கு, மூன்று, வேளையும், ருசியான, ஆரோக்கியமான உணவை, எவ்விதக் கட்டணமும்
இல்லாமல், 10 வருடகாலமாக அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று வழங்கி வருகிறார், 

நாராயணன்  கிருஷ்ணன், (வயது 32).

மனநிலை பாதித்தவர்கள், உடல் செயல்பாடு இல்லாதவர்கள், வறுமையால் பாதித்தவர்கள், நோயாளிகள்
என, மதுரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில், 400 க்கும் மேற்பட்டோருக்கு, கிருஷ்ணன், மூன்று
வேளையும் உணவளித்து வருகிறார்.



அவரின், ‘அக்ஷயா’ தொண்டு நிறுவனம், கடந்த பத்து ஆண்டுகளாக, ஒரு நாள் கூட ஓய்வு இல்லாமல்
இத்தகையவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது.
‘கேட்டரிங் டெக்னாலஜி’ படித்த இவர், பெங்களூரு, ‘தாஜ் ஓட்டல்’ தலைமை சமையல் கலைஞராக
பணியாற்றி வந்தார்.



வெளிநாட்டில், கை நிறைய சம்பளம் வாங்க வேண்டியவர், வெளி நாட்டு வேலையை நிராகரித்து,
இளம் வயதில் யாருமே செய்ய முடியாத அரும் பணியை செய்து வருகிறார்.



வெளிநாடு செல்லும் முன், தன் பெற்றோரிடம் ஆசி வாங்க மதுரை வந்தவர், தற்செயலாகப் பார்த்த ஒரு
காட்சி, அவரின் வாழ்க்கையையே மாற்றி விட்டது.
பசியால் துடித்த முதியவர் ஒருவர், பசியை பொறுக்க முடியாமல், மலத்தை எடுத்து சாப்பிட்டுள்ளார்.
அதைப் பார்த்த கிருஷ்ணன், அந்த முதியவரின் பசியைப் போக்கியுள்ளார்.
பத்தாண்டுகளுக்கு முன் துவங்கிய அந்த சேவை, இப்போது வரை நடக்கிறது.


இதற்கு, அவரின்
குடும்பத்தினரும், நல்ல உள்ளம் கொண்டோரும் உதவுகின்றனர். மதுரை சுற்று வட்டாரத்தில், 200 கி.மீ.,
பயணம் செய்யும், இவரின், ‘அக்ஷயா’ வேன், ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் பசியை ஆற்றி
வருகிறது.



இரண்டு ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவின், சி.என்.என்., ‘டிவி’ நிறுவனம் நடத்திய ஓட்டெடுப்பில்,
‘ஹீரோ’ என, இவரை தேர்ந்தெடுத்துள்ளது.



இது வரை, 12 லட்சம் பேருக்கு உணவு வழங்கியுள்ள கிருஷ்ணன், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு,
முடி வெட்டி, சவரம் செய்து, குளிக்க வைத்து, புத்தாடை அணிவித்து கவனித்தும் கொள்கிறார்.



இத்தகையவர்களுக்காக, மிகப் பெரிய தங்குமிடம் கட்ட வேண்டும் என்பது தான் இவரின் விருப்பமாக
இருந்தது.



கடந்த 3 ஆண்டுகால முயற்சியில் கிளீsலீஹ்ணீ ஜிக்ஷீust,மதுரைக்கு பக்கத்தில் நாகாதீர்த்தத்தின் அருகில் 3
ஏக்கர் தங்குமிடம் - மருத்துவமனை - சமையலறை - வி¬யாட்டு மைதானம் ஆகியவற்றை கொண்ட கட்டிடத்தைக் கட்டி முடித்துவிட்டார்.


6 மாத காலமாக மதுரையிலும் வீதியில் திரியும் மன நோயாளிகளை அழைத்து வந்து இங்கே தங்க வைத்து உணவு , பராமரிப்பு, மருந்து கொடுத்து காப்பாற்றி வருகிறார். அங்கே 450 க்கு மேல் ஆண்,
பெண் இருபாலரும் தங்க வைத்து பராமரிக்கப்படுகிறார்கள்.



madura travel service (P) Ltd.    Since 1986     
Recognized By Ministry of Tourism – Govt. of India     
Accredited By IATA,ITDC,TTDC,APTDC,PTDC,GTC,ODISHA,IRCTC,
SOUTHERN RAILWAY.
Approved FULL FLEDGED MONEY CHANGER BY RESERVE BANK OF INDIA 

International Money Transfer Agent For WESTERN UNION, UAE, MONEY GRAM,
Insurance Agent for TATA AIG, CMS, BAJAJ, ICICI, STAR, FG
Member Of  TAAI, TAFI, IAAI , IATO, ADTOI, FH&RA, SIHRA, 
Accepted : AMERICAN EXPRESS, DINERS CLUB, VISAMASTER CARD
25-3, Gandhi Irwin Road, (Opp-Egmore Railway Station) 
Kenneth Lane,Egmore, Chennai-600008.Tamilnadu.India.
Cell : +91 9841691234, Tel:+91 44 2819 2002 / 3858 / 2970, Fax: +91 44 2819 1813.
Email : india@maduratravel.com , WEB: www.maduratravel.com  

1 comments:

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger