சென்னை வேளச்சேரி வீனஸ் காலனி விரிவு 2 வது தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ். பெசன்ட்நகரில் உள்ள தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியில் உதவி மேலாளராக இருந்தார். இவரது மகன் துபாயிலும், மகள் அமெரிக்காவிலும் வசிக்கின்றனர். 4 மாதத்துக்கு முன்பு நாகராஜின் மனைவி, அமெரிக்கா சென்றுவிட்டார். கடந்த 16 ம் தேதி இரவு வீட்டில் நாகராஜ் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது செல்போன் மற்றும் ஸ்கூட்டர் கொள்ளை போனது. பீரோவும் உடைக்கப்பட்டு, வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது.
இதுகுறித்து வேளச்சேரி ஆய்வாளர் முத்துராஜா தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, திருவான்மியூர் பகுதியில் பதுங்கி இருந்த 6 சிறுவர்களை சனிக்கிழமை இரவு சுற்றிவளைத்துப் பிடித்தனர். தப்பியோடிய ஒரு சிறுவனை தேடிவருகின்றனர்.
சிறுவர்கள் சிக்கியது எப்படி என்பது குறித்து வேளச்சேரி போலீஸார் கூறிய தாவது:
கொலை நடந்த அன்று இரவு, நாகராஜுடன் சிலர் தங்கிருந்தது தெரிய வந்தது. அனைவரும் சேர்ந்து மது அருந்தியதற்கான அடையாளங்களும் வீட்டில் இருந்தன. அவருடன் அடிக்கடி தொடர்பில் இருந்தவர்கள் பற்றி விசாரித் தோம். நாகராஜின் செல்போனில் இருந்த எண்களை ஆராய்ந்தபோது சில சிறுவர்கள் நாகராஜுடன் அடிக்கடி தொடர்பு கொண்டதும், அவர்கள் அனைவரும் தலைமறைவானதும் தெரிந்தது. அவர்கள்தான் கொலையாளிகள் என்பதை அப்போதே முடிவு செய்து விட்டோம்.
இரண்டு நாட்களுக்கு முன்பு பெருங்குடி ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த நாகராஜின் ஸ்கூட்டரை கைப்பற்றினோம். நாகராஜின் செல்போனை சிறுவர்கள் வைத்தி ருந்ததால், சிக்னலை வைத்து அவர்கள் இருந்த இடத்தை கண்டுபிடித்தோம். “நாகராஜுடன் எங்களுக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது. கொலை நடந்த அன்று இரவும் மது அருந்திவிட்டு நெருக்கமாக இருந்தபோது மோதல் ஏற்பட்டது. ஆத்திரத்தில் நாகராஜை கழுத்தை நெரித்து கொன்றோம். போலீஸாரை திசை திருப்ப, பீரோவை உடைத்து, மிளகாய் பொடியை தூவினோம்” என்று பிடிபட்ட வர்கள் கூறியதாக போலீஸார் தெரி வித்தனர்.
உயிரைப் பறித்த தவறான பழக்கம்
கொலை செய்யப்பட்ட நாகராஜ், ஆண் நண்பர்களுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். அளவுக்கு மீறி தொடர்ந்த இந்த தவறான பழக்கமே அவரது உயிரை பறித்துள்ளது.
வங்கியின் ராயபுரம் கிளையில் பணியாற்றியபோது ஒரு சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது. அவனை வீட்டுக்கு அழைத்து வந்து நெருக்கமாக இருந்து விட்டு ரூ.500 கொடுத்தார். பின்னர் அடிக்கடி அழைத்து பணம் கொடுத்திருக்கிறார்.
அந்த சிறுவன் மூலம் மேலும் பல சிறுவர்களும் நாகராஜுக்கு அறிமுகமாகி யுள்ளனர். அவர்களிடமும் நெருக்கமாக இருந்து பணம் கொடுத்திருக்கிறார். சிறுவர்கள் அனைவரும் கொஞ்சம் வளர்ந்த நிலையில் நாகராஜின் விருப்பத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களை நாகராஜ் மிரட்டியிருக்கிறார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில்தான் நாகராஜை 7 சிறுவர்களும் சேர்ந்து கொலை செய்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்தது.
மனநல மருத்துவர் காந்திபாபு கூறும் போது, "அனைத்து வசதிகள் இருந்தும் இதுபோன்ற இயற்கைக்கு முரணான சிந்தனைகள் வருவதற்கு மரபணு குறைபாடே முதல் காரணம். இதை 'பீடோபைல்' என்று அழைப்பார்கள். இது ஒருவகை நோய். வயதுக்கு குறைவானவர்களுடன் நெருக்கம் காட்டுவது, அடுத்தவர் அந்தரங்கங்களை எட்டிப் பார்ப்பது போன்ற சிந்தனைகள் அதிகம் வந்தால் உடனே மனநல மருத்துவரை அணுக வேண்டும். இதற்கு சரியான மருத்துவ தீர்வுகளும் உள்ளன. ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் முழுவதும் குணமாக்கி விடலாம். இல்லையென்றால் பல இழப்புகளை இவர்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இந்த சிந்தனை உள்ளவர்கள் மற்றவர்களை துன்புறுத்தி இன்பம் காண நினைப்பவர்கள்" என்றார்.
மிளகாய்ப் பொடியும் மோப்பநாயும்
நாகராஜை கொலை செய்த சிறுவர்கள், அறை முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டுச் சென்றிருந்தனர். கில்லி படத்தில் விஜய் தொடங்கி வைத்த பழக்கம், வடிவேலுவின் நகைச்சுவைk காட்சிகள் வரை தொடர்கின்றன. இந்த திரைப்படk காட்சிகளுக்குp பின்னர் கொலை, கொள்ளையில் ஈடுபடுபவர்கள் பலர் மிளகாய் பொடி தூவி நாயின் மோப்ப சக்தியைத் திசை திருப்பத் தொடங்கி விட்டனர். மிளகாய் பொடி தூவினால் உண்மையில் நாயால் கண்டுபிடிக்க முடியாதா? என்பது குறித்து முன்னாள் தடயவியல் அறிஞரும், தற்போது துப்பறியும் நிறுவனம் நடத்தி வருபவருமான வரதராஜன் கூறும்போது, "ஒரு சம்பவம் நடக்கும்போது அந்த இடத்தில் இருந்த மனிதனின் வாடையை முகர்ந்து, அதே வாடை எங்கே இருக்கிறது என்பதை வைத்துதான் நாய் அந்த திசையை நோக்கி செல்லும்.
மிளகாய் பொடி தூவுவதால் நிச்சயம் மனிதனின் வாடை மறைந்து, மிளகாய் பொடியின் வாடை அதிகரித்து விடும். சில இடங்களில் மிளகாய் பொடியின் வாடையையும் மீறி மனிதனின் வாடை இருக்கும். அதை மோப்பநாய் எளிதில் கண்டுபிடித்து விடும். ஆனால் காவல் துறையினர் மோப்ப நாயை மட்டுமே நம்பி விசாரணை நடத்துவதில்லை. கைரேகை உட்பட கொலையாளிகளை கண்டுபிடிக்க பல வழிகள் உள்ளன. இதனால் கொலை, கொள்ளையில் ஈடுபட்டவர்கள் நிச்சயம் சிக்குவார்கள்.
தி இந்து - 21 -10-2013
அழகான குடும்பம் இருந்தும் அமைதியான வாழ்க்கை வாழத் தெரியாதவர்கள் ஐயா இவர்கள்.
ReplyDelete