Home » » ஆசிரியர் குழு மற்றும் நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்புகளில் மாற்றங்கள்

ஆசிரியர் குழு மற்றும் நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்புகளில் மாற்றங்கள்


தி இந்து' நாளிதழின் எடிட்டர்-இன்-சீஃப் ஆக என்.ரவியும், எடிட்டர் ஆக மாலினி பார்த்தசாரதியும் பொறுப்பேற்றுள்ளனர். 'தி இந்து' குழும வெளியீடுகளை வெளியிடுகின்ற மற்றும் அவற்றுக்கு உரிமை யாளரான 'கஸ்தூரி அண்ட் சன்ஸ் லிமிடெட்' நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக அருண் ஆனந்த் இனி பொறுப்பு வகிக்கமாட்டார். 'கேஎஸ்எல்' நிறுவனத்தின் சேர்மன் ஆகவும், 'தி இந்து' நாளிதழ் மற்றும் அதன் குழும வெளியீடுகளின் பதிப்பாளராகவும் என். ராம் பொறுப்பேற்றுள்ளார். நிறுவனத்தின் இணை சேர்மன் ஆக என்.முரளி பொறுப்பேற்றுள்ளார். இந்த முடிவுகள் திங்கள்கிழமை நடைபெற்ற நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, 'தி இந்து' நாளிதழின் கான்ட்ரிபியூட்டிங் எடிட்டராகவும், சீனியர் காலம்னிஸ்ட் ஆகவும் ஆக்கப்பட்ட சித்தார்த் வரதராஜன் தனது ராஜிநாமாவை சமர்ப்பித்தார்.

மற்ற இயக்குநர்களுக்கு குறிப்பிட்ட பொறுப்புகளை ஒதுக்கீடு செய்வதற்கும் இயக்குநர்கள் குழு முடிவு செய்தது.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த முடிவுகளுக்கான காரணம்- நிர்வாகத் தரப்புக் கட்டுக்கோப்புடன் நீண்ட காலமாகப் போற்றிப் பாதுகாத்துவரும் மதிப்பீடுகள் மீறப்பட்டது மற்றும் 'தி இந்து' குழுமத்தின் "நமது மதிப்பீடுகளைக் கட்டிக் காப்போம்" என்ற ஆசிரியர் குழு மதிப்பீடுகளுக்கான கட்டாய நெறிமுறைகள் தொடர்ந்து மீறப்பட்டன என்பதும்தான்.

ஊழியர்களின் மனோதிடத்தையும், சிறந்த தொழில் உறவுகளையும், நாளிதழின் இருபது லட்சத்துக்கும் அதிகமான வாசகர்களின் நம்பிக்கையையும் நிலைநிறுத்துவதே இதன் நோக்கம்.

'பிசினஸ் லைன்', 'ஃபிரன்ட் லைன்', 'ஸ்போர்ட்ஸ்டார்', 'தி இந்து' (தமிழ்) ஆகியவற்றுக்கு இப்போதுள்ள ஆசிரியர் குழுக்களே மாற்றம் இன்றித் தொடரும்.

மற்றபடி, பங்குதாரர்கள் -இயக்குநர்கள் மற்றும் தொழில்நேர்த்தி படைத்தவர்கள் இணைந்த இப்போதைய செயல்பாடுகள் மாற்றமின்றித் தொடரும்.

135 ஆண்டுக் கால பாரம்பரிய சிறப்புமிக்க 'தி இந்து' நிறுவனம், தன்னுடைய ஆசிரியர் குழு மற்றும் நிர்வாகத்தின் அடிப்படையான மதிப்பீடுகளையும், இதழியல் துறைக்கான தனிச்சிறப்புகளையும் தொடர்ந்து பின்பற்றும் என்பதை இத்தருணத்தில் மீண்டும் உறுதிசெய்கிறது.

ஊழியர்களின் மனோதிடத்தையும், சிறந்த தொழில் உறவுகளையும், நாளிதழின் இருபது லட்சத்துக்கும் அதிகமான வாசகர்களின் நம்பிக்கையையும் நிலைநிறுத்துவதே இதன் நோக்கம்.     
                                   
தி இந்து - 22 - 10 - 2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger