செல்ல வேண்டிய பாதை, பருவ நிலை, வரைபடம் எனப் பல்வேறு தகவல்களையும் இணைத்துக் கொடுக்கும் ஹெல்மெட் கண்டறியப்பட்டுள்ளது.
சிலிக்கான் வேலி பகுதியைச் சேர்ந்த நிறுவனம் இந்த ஹெல்மெட்டைக் கண்டறிந்து ள்ளது. ஹெல்மெட்டினுள் சிறிய திரை அமைக்கப்பட்டுள்ளது. இதில், வலது கன்னம் அருகே, சாலை வழித்தடம் தெளிவாகக் காண்பிக்கப்படும். ஓட்டுநருக்குப் பின்புறம் உள்ளவற்றை 180 டிகிரி கோணத்தில் காண்பிப்பதற்கான கேமராவும் இணைக்கப்பட்டுள்ளது.
ஆண்டிராய்டு தளத்தில், புளூடூத் தொழில்நுட்பத்துடன் செயல்படும் இந்த ஹெல்மெட்டில், செல்ல வேண்டிய வழித்தட வரைபடம், வானிலை முன்னறிவிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
ஸ்மார்ட் போனுடன் இணை க்கப்படும் தொழில்நுட்பம் இருப்ப தால் தொலைபேசி அழைப்பு, இசை, குறுஞ்செய்திகளை அனுப்புதல், சென்றடைய வேண்டிய இடத்தை வரைபட த்தின் மூலம் தேர்வு செய்தல் அல்லது மாற்றுதல் போன்ற செயல்பாடுகளைக் கைகளைப் பயன்படுத்தாமலேயே, குரல் மூலம் கட்டுப்படுத்தும் வசதியும் உண்டு. இந்த ஹெல்மெட் வணிக ரீதியான பயன்பாட்டுக்கு அடுத்த ஆண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment