ஹிட்லரின் மறுபக்கம் - வேங்கடம்;
பக். 190; ரூ.90;
விகடன் பிரசுரம்,
சென்னை-2;
044 - 4263 4283.
ஹிட்லரின் மறுபக்கம் என்று தலைப்பு இருந்தாலும், ஹிட்லரின்
வாழ்க்கையில் ஏற்கெனவே சொல்லப்பட்ட குறிப்புகளை மிகவும் சுவையாக,
எளிய நடையில் எடுத்துச் சொல்கிறார் நூலாசிரியர் வேங்கடம்.
புதுமைப்பித்தன் ஏற்கெனவே ஹிட்லர் பற்றி எழுதிய "கப்சிப் தர்பார்' புத்தகம்,
அவருக்கே உரித்தான் இலக்கிய நடை, எள்ளல்களுடன் படிக்கச்
சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் வேங்கடத்தின் இந்நூல், ஹிட்லரின்
காலக்கிரமமான வளர்ச்சியை முன்வைக்கிறது.
ஹிட்லரை நேதாஜி சந்தித்த புகைப்படம், காந்தியின் கடிதங்களின் நகல்கள்
என அரிய படத்தொகுப்புகள் வாசகனின் ஆர்வத்தைத் தூண்டி, நூலைப்
படித்து முடிக்க வைக்கின்றன.
தினமணி - 28-10-2013
0 comments:
Post a Comment