சிங்கப்பூர் - மலேசியத் தந்தை தமிழவேள் கோ.சாரங்கபாணி - ஜே.எம்.சாலி; பக்.256; ரூ.200; இலக்கியவீதி, 52/3, செüந்தர்யா குடியிருப்பு, அண்ணாநகர் மேற்கு விரிவு, சென்னை-101.
1935 ஆம் ஆண்டு ஒரு காசு விலையில் சிங்கப்பூரில் தொடங்கப்பட்டதுதான் "தமிழ் முரசு' வார இதழ். பின்பு அது நாளிதழானது. அதைத் தொடங்கி நடத்தியவர் கோ.சாரங்கபாணி. இந்நூலாசிரியர் ஜே.எம்.சாலி 1964 இல் தமிழ்முரசில் வேலை செய்ய சிங்கப்பூருக்குச் சென்றதில் இருந்து, கோ.சாரங்கபாணியுடனான அவருடைய அனுபவங்கள் இந்நூலில் சுவையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கோ.சாரங்கபாணி இதழ் ஆரம்பித்து நடத்தியதோடல்லாமல், 1951 இல் இன்று "தமிழர் பேரவை' என்றழைக்கப்படும் தமிழர் பிரதிநிதித்துவ சபையைத் தொடங்கி, இந்திய சமூகத்தின் சார்பாகப் பல கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்தார்.
சிங்கப்பூர் - மலேசியத் தமிழர்கள் தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசியதைக் கண்டித்தவர் கோ.சாரங்கபாணி.
1953 ஆம் ஆண்டு மலாயாப் பல்கலைக் கழகத்தில் தமிழுக்கு முதலிடம் தரும் இந்தியத் துறை அமைவதற்காகப் போராடியது, சிங்கப்பூரில் ஆங்கிலம், சீனம், மலாய் மொழிகளைப் போல தமிழையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன் வைத்தது, மலாயா நாட்டு எழுத்தாளர்கள் ஒன்று கூடி ஒருவரையொருவர் அறிந்து கொள்ள உதவும் வகையில் எழுத்தாளர் பேரவையை அவர் ஆரம்பித்தது போன்ற செயற்கரிய செயல்களை எல்லாம் இந்நூல் மிகவும் அருமையாகப் பதிவுசெய்திருக்கிறது
தினமணி - 28-10-2013.
0 comments:
Post a Comment