Home » » சென்னை சிவபதிகள் 333 கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபை அழைப்பு !

சென்னை சிவபதிகள் 333 கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபை அழைப்பு !

shiva_linga_eh85smமுக்கிய வேண்டுகோள்

திருத்தகுநல்லீர் ,
வணக்கம்

அண்டமெல்லாம் நிறைந்திருக்கும் சிவபெருமானின் திருவடியை உயிர்கள் அடையும் பொருட்டு சிவவழிபாடு , ஆதிகாலம் முதலே உலகெங்கும் நடைபெற்று வருகிறது .நம் தமிழகத்தில் மட்டும் முப்பத்தாராயிரத்திற்கும் மேற்ப்பட்ட சிவாலயங்கள் வழிபாட்டில் இருந்தன .

காலப்போக்கில் அந்நியர் ஆதிக்கம் , சான்றோர்களின் வாக்கைக் கடைபிடித்து நடவாததாலும் சிவவழிபாட்டின் முக்கியத்துவம் குறைந்தது . இதன் விளைவாகச் சிவாலயங்கள் பராமரிப்பின்றிச் சிதிலம் அடைந்தன.

இதனால் பலகிராமங்களில் சிவலிங்கத் திருமேனி மண்ணில் புதைந்தும் ,குளத்தில் உள்ளிருக்கும் நிலையும் உருவானது .இந்நிலையிலிருந்து மேம்பட இறைவன் பல அருளாளர்களின் வழியே நம்மை சிவநெறியின் செம்மையை உணர்த்தி சிவபெருமான் அருள்செய்துவருகிறார் .

இதன்வழி திருவருளால் அடியவனின் குருநாதர் சிவ . கு .சுந்தரமுர்த்தி ஐயா அவர்களின் பேச்சு அடியவனை சிவநெறிக்கு அழைத்துவந்து ,பல ஊர்களில் உள்ள சிவாலயங்களை காணும் வாய்ப்பு அடியவனுக்கு கிடைத்தது .

இவ்வாறு தலயாத்திரை செல்லும்போது சிவபெருமான் திருவுள்ளப்படி அனைவரும் பயன்படும் வகையில் சென்னை சிவபதிகள் 333 என்ற வழிகாட்டி நூலினை எழுதி வெளியிடும் வாய்ப்பு ஏற்பட்டது .திருத்தலயாத்திரை சென்றபோது சிதிலமடைந்த திருகோவில்களையும் ,மண்ணில் புதைந்த சிவலிங்க திருமேனிகளையும் கண்டு வேதனையாக இருந்தது .

சிவபெருமானின் கருணையினால் அடியவனின் நண்பர்களோடு திருப்பணி செய்யத் திருவருள் கூட்டியது .மண்ணில் புதைந்திருக்கும் சிவலிங்கத்திருமேனியை வெளியில் எழுந்தருளச்செய்து , இறைவனுக்கு மேற்கூரை மற்றும் ,சுற்றுப்பாதுகாப்புக் கதவுடன் (இரும்பு குழாய் மற்றும் உயர்தர தகடுகளால் ) அமைத்து , தினவழிபாடு நடைபெற முயன்றுவருகிறோம் .

இதுவரை 50 திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று இத்திருப்பணியை செய்து வந்துள்ளோம் .சிவபெருமானின் ஆணைப்படி இத்திருப்பணியை தொடர்ந்து செய்துவர ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை சிவ.கபாலிநேசன் ஐயாவின் தூண்டுதலால் “கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபை ” என்ற பெயரில்
தமிழக அரசின் பதிவுதுறையில் பதிவு செய்து இவ்வமைப்பின் வங்கி கணக்கை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஆரம்பித்துள்ளோம் .

இத்திருத்தொண்டு சிறந்த முறையில் நடைபெற தங்களால் இயன்ற நிதி உதவி வழங்கி , கிராமங்களில் சிவவழிபாடு சிறக்க ஆதரவு தாருங்கள் . இவ்வளைதலத்தில் வருங்காலத்தில் சைவநெறி விளக்க வினா -விடை பகுதி ,63 நாயன்மார்களின் வரலாறு மற்றும் பல செய்திகளை இணைக்க முயற்சி செய்து வருகிறோம்

தாங்கள் இவ்வமைப்பில் அங்கத்தினராகச் சேர விருப்பம் உள்ளவர்கள் இதற்கான விண்ணப்படிவம் இவ்வளைதலத்தில் உள்ளது .

தங்கள் இடங்களில் சிவலிங்க திருமேனி மண்ணில் புதையுண்டு இருக்கும் நிலை இருந்தால் அத்தகவலை தாருங்கள் .இறைவன் திருவருளால் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வழிபாடில்லாத சிவலிங்க திருமேனி எங்கும் இல்லை என்று நிலையை உருவாக்க திருவருளால் முயற்சி செய்வோம் .

KOCHENGANAAYANAR SIVATHONDU SIVASABAI
INDIAN OVERSEAS BANK
BRANCH – Dr . R .K .SALAI ,CHENNAI – 4
ACCOUNT NO – 029101000025001
IFS CODE – IOBA0000291.

நன்றி , வணக்கம் .
தங்கள் அன்புள்ள அடியவன் ,
கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபை
செயலாளர் சிவ.த. தேன்ராஜ் என்ற சிவ.வெங்கடேசன்,
No.60,சேணி அம்மன் கோவில் தெரு,
தண்டையார்பேட்டை ,சென்னை-600081 .

[9444352848 , 9677226260]


http://chennaisivapathigal.blogspot.in/

கன்னியாகுமரி கடற்கரையில் மண்ணில் புதைந்த சிலை மீட்பு – மீண்டும் சிவலிங்க வழிபாடு
மாலைமலர்-பழையசெய்தி
கன்னியாகுமரி, நவ. 26-
e420182a-6437-4618-8292-b1b4bc5763db_S_secvpf.gif
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரையில் மணல் பரப்பில் 2 அடி உயர சிவலிங்கம் சிலை ஒன்று உள்ளது. கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் கடலில் நீராடி விட்டு சிவலிங்கம் சிலையை வழிபட்டு செல்வார்கள். பவுர்ணமி தினத்தில் கேரள பக்தர்கள் பலர் அந்த சிலைக்கு பால் ஊற்றியும் வழிபட்டனர்.
இந்த நிலையில் சங்கிலித்துறை கடற்கரையில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் ரூ.44 லட்சம் செலவில் கடல் அலை தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. அப்போது கடல் அலை சிவலிங்கம் சிலை பக்கம் மோதி, மோதி மணலை கொண்டு நிரப்பியது. இதனால் சிலை மண்ணில் புதைந்தது. இதற்கிடையே கடல் அலை தடுப்புச்சுவர் கன்னியாகுமரி கடலில் இயற்கையை மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் அலை தடுப்புச்சுவர் கட்டும் பணி நிறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து மண்ணில் புதைந்த சிவலிங்கம் சிலையை மீட்கும் முயற்சியில் சிவசேனா கட்சியினர் ஈடுபட்டனர். நேற்று மாலை பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு சிலையை மூடிய மணல் அப்புறப்படுத்தப்பட்டது. அதன்பின் சிவலிங்கம் சிலை வெளியே தெரிந்தது. சிலை தெரிந்ததும் பக்தர்கள் பரவசத்துடன் சிவலிங்க வழிபாட்டை தொடங்கினர். இன்று காலையிலும் பக்தர்கள் கடலில் நீராடி சிவலிங்கத்தை வழிபட்டுச் சென்றனர்.

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger