Home » » முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டுப் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டது

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டுப் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டது


முள்ளிவாய்க்காலில்(2009) – ம் ஆண்டு  2 இலட்சத்திற்கும் மேற்ப்பட்ட நமது தொப்புள்கொடி உறவான ஈழத்தமிழர்களை இழந்தோம்.. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை(2013) மூட முனையும் …இன்றைய அனைத்து கூட்டுச்சதியை முறியடித்து துரோகிகளையும் ,துணை நிற்பவர்களையும் மக்கள் மன்றத்தில் தண்டிப்போம்!
 
580791_564498066955169_564968125_n529492_564498220288487_1076474241_n1461147_564498270288482_412721173_n1461147_564498270288482_412721173
தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அவசரமாகத் திறக்கப்பட்டுள்ளது. என்ன நடத்தென்றால்….. இப்படி ஒரு விழாவே நடத்தக்கூடாது. இப்படி ஒரு நினைவுச் சின்னமே கூடாது என்பது சிலரின் கனவு, நினைவு. அதன் பேரில் மத்திய உளவு நிறுவனம் ‘நிறைய’ வேலைகளைச் செய்தது. ஒட்டுக்கேட்பும் நடந்தது. இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என பழ.நெடுமாறன் ஐயா நீதிமன்றத்தை நாடினார். அதன் பேரில் விழாவை நடத்த நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. கூடவே இதில் மத்திய அரசின் கருத்து என்ன எனவும் கேட்டிருந்தது. இந்த நிலையில் மத்திய உளவு நிறுவன உயர் அதிகாரிகள், இங்குள்ள உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும், தலைமைச் செயலக அதிகாரிகளுக்கும் நெருக்கடி கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று  சுற்றினார்கள் நேற்று உயர்நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உச்சநீதி மன்றத்திற்குப் போகும் முடிவைப் போலீஸ் எடுத்தது. அதன் பேரில் ‘மேற்கொண்டு எந்த வேலையையும் செய்யாதீர்கள். மேல்முறையீட்டிற்குப் போகிறோம்’ என சொல்லாமல் வேறு வேறு காரணங்களைக் கூறி அங்கு நடக்கும் வேலைகளை நிறுத்த முனைந்தார்கள். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட உள்ள அந்த நிலத்தில் ஒரு பிரச்சனை என்று, வேறு போலி நபர்களின் பேயரில் ஒரு மனுவைக்கொடுத்து, அதன் மூலம் தடுத்து நிறுத்தும் வேலை நடத்தது. இன்னும் சிலதை இங்கே சொல்ல முடியாது.
 
 நடப்பவை அனைத்தையும் ‘அறிந்து’கொண்டு அதிரடியாக களத்தில் இறங்கினார்கள். பின்னிரவு நேரத்திற்குள்ளாகத் தகவலை ரகசியமாககொண்டுசென்று, அருகில் இருந்த முக்கிய நபர்களையும், அனைத்துக்கட்சி நிர்வாகிகளையும் ‘முக்கியக் கூட்டம்’ என்ற பெயரில் வரவழைத்துவிட்டார்கள். நேற்று நீதிமன்ற உத்தரவு பெற்ற விஷயமாக இருக்கும் என்று அங்கே சுற்றியிருந்த மத்திய உளவு நிறுவன ஆட்கள் கேட்புகளும் சாதாரணமாக இருந்துள்ளனர். இப்படியாக….அவசரக்கூட்டம் என்றுகூடி, அங்கேயே விஷயத்தைப் போட்டுடைத்து பட்டென்று திறப்பு விழா  என அறிவித்து நடத்தி முடித்துவிட்டார்கள். எல்லாமும் சரி. மத்திய அரசுக்கு ஏன் இவ்வளவு வேகம். ஒன்றுமில்லை. இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பதற்குமுன்பாக இந்த முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பது சரியில்லை. சர்ச்சையை உருவாக்கும். அதுவரை தடுக்க வேண்டும். அல்லது தாமதப்படுத்த வேண்டும் என சிங்கள அரசு வேண்டிக்கொண்டது. வேண்டுதல் என்ன? மிரட்டியது. அதை இந்தியா நிறைவேற்றப் பார்த்தது. இதுதான் ரகசிய விளையாட்டு. இப்போதைக்கு இது போதும். மற்றபடி 8,9,10.தேதிகளில்  வழக்கமான நிகழ்ச்சி நடக்கும்…
 
நன்றி : காந்தன் மலை சாமி.

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger