சமூக சீர்திருத்த ஆர்வலர் ராஜாராம் மோகன் ராயின் பெருத்த முயற்சி யால் சுதந்திரம் பெறுவதற்கு முன் சாரதா சட்டம் வந்தது. இச்சட்டம் சிறுவர் திருமணத்தை தடை செய்தது. இங்கிலாந்து ஆட்சிக்குட்பட்ட இடங்களில் மட்டுமே இச்சட்டம் செல்லுபடியாகும் என்பதால், ஆந்திராவுக்கு மிக அருகில் உள்ள, ஃபிரன்ச் ஆளுமைக்குட்பட்ட ஏனாமில் உள்ள வெங்கண்ணா பாபு கோயிலில் தினம் தினம் ஆயிரக்கணக்கான குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றன. எனவே இந்த இடத்தைக் கல்யாணபுரம் என்று அழைக்கின்றனர். பெரிய முறுக்கு மீசையுடன் காணப்படுகிறார் இந்த வெங்கண்ணா. இக்கோயில் இன்றும் 15ஆம் நூற்றாண்டு சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.ஆந்திர மாநில காகிநாடாவில் இறங்கி, ஏனத்திற்கு எளிதாக வழிகேட்டுச் செல்லலாம். 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சர்ச்சும், மசூதியும் வரலாற்றுச் சின்னங்களாய் இன்றும் இங்கு இறை விழாக்களைக் கொண்டாடிக் கொண்டு இருக்கின்றனர்.
300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சர்ச்சும், மசூதியும் வரலாற்றுச் சின்னங்களாய் இன்றும் இங்கு இறை விழாக்களைக் கொண்டாடிக் கொண்டு இருக்கின்றனர்
தி இந்து
0 comments:
Post a Comment