Home » » வெளிநாடுகளில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள உதவித்தொகை

வெளிநாடுகளில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள உதவித்தொகை

   

இந்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்கள் வெளிநாடு சென்று ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்வதற்கு இன்லேக்ஸ் பவுண்டேஷன் கல்வி உதவித்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த உதவித்தொகையின் மூலம் மூன்று மாதங்கள் ஆராய்ச்சி சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியும். இதற்கான விமான பயணக்கட்டணம், தங்கும் வசதி, மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் என அனைத்துக்கும் குறிப்பிட்ட அளவு மட்டுமே உதவித்தொகையாக வழங்கப்படும்.

இந்த கல்வி உதவித்தொகையை பெற இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

இந்த கல்வி உதவித்தொகை பெற விரும்புவோர் செய்ய வேண்டியவை. இன்லேக்ஸ் டிராவல் கிராண்ட்டில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை முழுவதும் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை www.inlaksfoundation.org என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சி கட்டுரை மாதிரியை இணைத்து அனுப்ப வேண்டும். இந்த கட்டுரை நன்கு வடிவமைக்கப்பட்டதாகவும், தங்களது ஆராய்ச்சி முழுவதையும் விளக்குவதாகவும், ஆய்வின் களப்பணி மற்றும் வேறு ஏதாவது பணி செய்திருந்தால் அதையும் சேர்த்து அனுப்ப வேண்டும்.

இந்த கல்வி உதவித்தொகையின் மற்ற விபரங்களை அறியவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் www.inlaksfoundation.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Inlaks Shidasani Foundation, 86/87 Atlanda, Nariman Point, Mumbai-400011 என்ற முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.

தினமணி - 29 - 10 -2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger