பீஜிங் உலகிலேயே மிக நீளமாக நீருக்கு அடியில் சுரங்க ரயில் பாதையை சீனா ரூ.2 லட்சத்து 22 ஆயிரம் கோடியில் அமைக்க முடிவு செய்துள்ளது.
சீனாவில் உள்ள போகாய் கடல் பகுதியில் லியாவ்னிங் மாகாணத்தில் உள்ள தாலியாங் நகரத்தில் இருந்து ஷான்டாங் மாகாணத்தில் யண்டாய் நகர் வரை நீருக்கு அடியில் உலகிலேயே மிக நீளமான சுரங்க ரயில் பாதையை அமைக்க சீன அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து சீனாவின் சுரங்க ரயில் பாதை நிபுணர் வாங்மெங்சு கூறுகையில், Ô2012ம் ஆண்டு முதல் இந்த பாதையை அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான அனுமதி கிடைத்ததும் 2015 அல்லது 2016ல் பணிகள் தொடங்கும். கடலுக்கு அடியில் 123 கிமீ தூரத்துக்கு சுரங்க ரயில் பாதை அமைக்க சுமார் ரூ.2 லட்சத்து 22 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகிலேயே இதுதான் மிக நீளமான நீருக்கு அடியில் அமைக்கப்படும் சுரங்க ரயில் பாதையாக இருக்கும் என்றார்.ஏற்கனவே நீருக்கு அடியில் ஜப்பானின் ஷெய்கான் சுரங்க பாதையும், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள கடலுக்கு அடியிலான சுரங்க ரயில் பாதையும்தான் மிக நீளமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
தினகரன்
0 comments:
Post a Comment