http://www.tamilvu.org/library/l5H00/html/l5H00ind.htm
http://www.tamilvu.org/slet/l5100/l5100pd1.jsp?bookid=121&pno=11
மதுரைத் தமிழ்ச்சங்கத்துப் புலவராற்றுப்படை
மூலமும் உரையும்
ஆசிரியர்:
மகாவித்துவான்
வா. குலாம் காதிறு நாவலர்.
பரிதிவெயி லெறிக்கும் விரிவுறு வெளிக்கீழ்
விளிங்கனி நின்றாங்கு நின்று துளங்கிய
மருணீர் மணியென வுருணீ ரும்ப
ரடர்ந்துமண லாடையிற் படர்ந்தன் றாகலிற்
http://www.tamilvu.org/slet/l5100/l5100pd1.jsp?bookid=121&pno=11
மதுரைத் தமிழ்ச்சங்கத்துப் புலவராற்றுப்படை
மூலமும் உரையும்
ஆசிரியர்:
மகாவித்துவான்
வா. குலாம் காதிறு நாவலர்.
பரிதிவெயி லெறிக்கும் விரிவுறு வெளிக்கீழ்
விளிங்கனி நின்றாங்கு நின்று துளங்கிய
மருணீர் மணியென வுருணீ ரும்ப
ரடர்ந்துமண லாடையிற் படர்ந்தன் றாகலிற்
05.கருங்கடற் றெனுமிவ் விருங்கண் ஞாலத்துப்
பரத கண்டம் பண்ணிய விரதந்
தனிமையென் பெயர்த்தா யினிமையென் பொருட்டா
யுத்தர மொரீஇத் தக்கணம் போந்தெனக்
கங்கைச் சடைய னொருபாக மங்கையன்
10 சமயப் பொதியத் தமர்முனி யகத்தியற்
காய்ந்துதர வுணர்த்திப் போக்கப் போந்த
வேர்ந்துணர் மாந்தர்க் களிக்கு மீர்ந்தமிழ்
முழுதுணர் சிறப்பிற் பழுதுதீர் புலவ
வொன்றுநின் னுள்ளங் குன்றுதக விரியக்
15 கேளா யத்தை கிளக்குவல் வாளா
மன்னிய வொருநீ யன்ன யானும்
பொருந்துறு புகழி னருந்தமிழ் நசைஇ
மதனுடை முந்துநூ லதன்வழிப் பட்ட
தொல்காப் பியமுதற் பல்காப் பலவென
மன்னிய வொருநீ யன்ன யானும்
பொருந்துறு புகழி னருந்தமிழ் நசைஇ
மதனுடை முந்துநூ லதன்வழிப் பட்ட
தொல்காப் பியமுதற் பல்காப் பலவென
20 விலக்கணந் தெரிக்கும் விலக்கினூ றேர்ந்து
பொற்புறு மெழுத்துச் சொற்பொருள் யாப்பு
விழுமிய வகையி னணியிவை பழுநி
யெஞ்சலில் சீர்த்திப் பஞ்சகா வியம்பிற
வெட்டுத் தொகையொடும் பத்துப் பாட்டொடு
பொற்புறு மெழுத்துச் சொற்பொருள் யாப்பு
விழுமிய வகையி னணியிவை பழுநி
யெஞ்சலில் சீர்த்திப் பஞ்சகா வியம்பிற
வெட்டுத் தொகையொடும் பத்துப் பாட்டொடு
25 மின்பமர் கீழ்க்கணக் கொன்பதிற் றிரட்டியெனச்
சங்க மரீஇய பொங்குநூ றேற்றி
மறையில் கேள்வித் துறைபல் போகிப்
பாவினம் யாத்தற்கு வாய்வளங் கூர்ந்தனன்
கற்றுணர் மாக்க ளருமை யிற்றென
30 வளந்தறிந் ததனை யுளந்தகத் தெரிந்து
பொன்னு மணியு முன்னாட் சிதறித்
தம்பெயர் விட்டன ரிம்பரின் மாய்ந்த
பாரியுங் காரியு மாயு மோரியும்
பேகனு நள்ளியு மதிகனு மாகி
35 வரையாது கொடுத்தோர் வாணா ளீதன்
றரையருந் தமிழ ரல்ல ராகலி
னற்றமிழ் மாட்சியுங் கற்றவர் மாட்சியும்
புரிந்துளங் களிப்பத் தெரிந்தாங் கருண
ரில்லென் கவற்சியிற் புல்லென் முகன்கண்
40 டுடுக்கையு முண்டியு மிருக்கையு முசா அய்க்
கொடுக்குநர் யாரென் றடுக்குமவர் கரப்பக்
கூடம் போன்ற கோபுர நிரையொடு
மாடஞ் சான்ற மதுரைமா நகர்க்கண்
முந்திய சங்க மூன்றொன் றாகிப்
பிந்திய சங்கம் பிறந்த தாலெனத்
45 கண்ணின் மாக்கண் முன்ன ரெண்பட
வியன்மணி நீரையிற் செயன்மணி விராஅய்க்
கிடந்திமைத் தாங்கு மடந்தகழ் பவர்மு
னிருவருந் தகைமையி னொருவரெனக் கலாவி
யறியா ரென்னாப் பெருஞ்சுட் டுறீஇப்
வியன்மணி நீரையிற் செயன்மணி விராஅய்க்
கிடந்திமைத் தாங்கு மடந்தகழ் பவர்மு
னிருவருந் தகைமையி னொருவரெனக் கலாவி
யறியா ரென்னாப் பெருஞ்சுட் டுறீஇப்
50 போலிப் புலமையர் திரியுமிக் காலத்துப்
புனைநூ லுணரா வனைய ரானு
நறவோர் வாழ்க்கைப் பறவையின் விழைஇ
யருங்கலை பலவு மொருங்குடன் றுரீஇ
நன்மையிற் பயிலுந ரின்மை யானும்
55 பயிலுநர் சிலரே யாகிப் பயில்வுழிப்
புரத்தன் மாலையர் கரத்த லானு
நன்றுறு தமிழ்வளங் குன்றுதக வுணர்ந்து
பண்டையிற் சிறந்தது தழைப்பக் கொண்டு
வானம ரதனை வளர்ப்பல் யானென
60வஞ்சிறைத் தும்பி துஞ்சி யூதப்
பிணியவிழ் பலர்ந்து சுழல்காம் பணிமலர்
வன்னக் கம்பலம் விரித்தாங் கன்ன
தரைபடர்ந் திமைக்கும் விரைகெழு பூம்பொழி
லிருமருங் கொழுகிய பொருகரை வையைச்
65.செந்தமிழ் நாட்டுத் திருத்தகு மூதூர்
பைந்தமிழ் வளர்த்த பாண்டிய ரிருக்கை
நடைமாண் புரவியுந் தொடைமான் றேரும்
பணையிரு கோட்டி னிணையெருது பிணித்த
பாண்டிலுஞ் சிவிகையுஞ் சிறுகண் யானையுங்
75 தண்டமிழ் விரிக்கும் பண்டைநூ லெழும்ப
வியனனி விழைகுநர் குழீஇனர் பயில
மால்செய் கல்வியர் மாண்பி னூல்செய
வுரைகாண் வல்லுநர் வரைகாண் டெழுத
முறைபிறழ்ந் துற்ற குறைபல் காண்மார்
வியனனி விழைகுநர் குழீஇனர் பயில
மால்செய் கல்வியர் மாண்பி னூல்செய
வுரைகாண் வல்லுநர் வரைகாண் டெழுத
முறைபிறழ்ந் துற்ற குறைபல் காண்மார்
80 முதுநூ றேண்டிப் பழுதாய்த் தமைக்கக்
குற்றம் போகிய கற்றன கெடாஅப்
பேணூஉ வைகுமோர்ப் பரிக்கை காணூஉச்
சிறப்புப் பெயரொடு பரிசிலு மளிப்பப்
பின்னும் வேண்டுவ வென்னவும் புரிய
85 மங்கலி லருந்தமிழ்ச் சங்கமொன் றிரீஇனன்
குமரிமருங் குற்ற நிமிர்திரை முரியுஞ்
சேது காவலர் திறற்குடிப் பிறந்தோன்
றீதுதீர் வாழ்க்கைத் தென்புலங் காப்போன்
மறங்காண் பகைவர் வணங்கிய புறங்காண்
90மஞ்சுவரு மேற்றி னஞ்சுவரு திறலினன்
புலவர் வம்மின் பொருநர் வம்மின்
லர்புகழ் கூத்தரும் பாணரும் வம்மின்
போராக் கதவதிப் புரவலன் வாயிலென
வேரார் வான்கொடி நுடங்குபு நுடங்கி
95 யகவையம் மாடத்து முகவை யூரன்
மேலறி வுயர்ந்த நூலறி புலவன்
முத்தம் விளைவயற் பாலவ னத்த
நாடுசெகிற் கொண்டு பீடுகெழு குடிதழீஇ
முற்றக் காக்குங் கொற்றக் குடையினன்
1
100 விரைகமழ் கண்ணியன் பாண்டித் துரையெனக்
கேட்டனெ னன்றே கெட்டதென் கவற்சி
வேட்டன வடைதல் விளிவுறா தாலெனக்
கதுமென வெழுஉச் சினைகொள் புதுமலர்
வண்டுந் தேனு முண்டன களிப்ப
105 நறவிருந் தளிக்கும் புறவுறழ் சோலை
வளனற வறியா மல்லலம் முதுநகர்
மாண்புறப் புகூஉக் காண்பன கண்டு
செந்தமிழ் விளங்குமச் சங்கம் போஓய்
நல்லிசைப் புலவர் சொல்லிசை பரப்பக்
முன் பக்கம் மே110 கூண்டினி திருக்கு மவைக்களங் குறுகி
யாண்டியான் யாத்த கவியரங் கேற்றி
110 கூண்டினி திருக்கு மவைக்களங் குறுகி
யாண்டியான் யாத்த கவியரங் கேற்றி
யுலகுசொல் சிறப்புப் பெயரொடு பெறாஅ
வரிசை யான்ற பரிசிலும் பெறூஉ
வந்தனென் யாஅரெனக் கண்டறிந் தவரே
115 நீயிருஞ் செல்லிய ராண்டுப் பலபெற
மேயினி ரெனினே யின்னே விட்டிவ ட்
காலிற் செல்லி னாளிற் செல்லு
முருமுறுமோ டுறலொழியி
னிருபுறனு மிருப்புருளை
120 நான்குருளக் கான்குழுமும்
வாஅய்க்கொள்ளிப் பேஎயுயிர்ப்பி
னொலித்துமிழுங் கலித்தூமங்
குழல்வாயிற் சுழல்கொள்ள
மரவட்டைச் செலவொப்பச்
125 செல்பாண்டில் பல்கோத்த
நெடுந்தொடரி னிரைநீண்டு
கடுங்காலிற் கழிவிசையி
னெந்திர வூர்தி யிவர்ந்தனிர் படர்மி
னந்தமில் காட்சி யணிபல காண்பிர்
130 வீறிய மாக்க ளேறிறங் கிடன்றொறு
மூறிய வமிழ்தி னுண்டிபல் பெறுகுவிர்
பன்னா ணடந்தனிர் மன்னா தெய்க்குங்
காலுழப் பறியா மாலுறு செலவின்
மலைப்புறு நெடுவழி யொருநா டொலைச்சிச்
135 சூடிய நறுமலர் வாடிய லுறாமு
னிதிமலி கூடலம் பதிவயிற் புகுவி
ராவயிற் போந்து கூரயி லேந்திய
முடியுடை வழுதியர் முறைவழி யிருந்த
கொடிநுடங் கெயிலிற் கோயின் மறுகு
140 மாலய வீதியு மாவண வீதியு
மறிந்தவர் வியக்கு மாண்மையர் மலிந்து
செறிந்தமர் தெருவுந் திருவொடுங் காண்பிர்
கண்டனிர் பின்றைத் திண்டிறற் புலவர்
கூடுறு சங்க நாடினிர் செலினே
145 யாயிரங் கதிர்கொள் பருதி ஞாயிறு
திருந்துவரைச் சிகர மீமிசை யிருந்தெனக்
கரும்பனைக் கையின் வேழத் தொருவெரி
நுவவு மதிவட்டத் தவவில்குடை நிழற்ற
வருமிறை யிவனெனப் பொருவறு விதியி
150 னரப்புவகை பிழையா நான்குவகை பரப்பிய
யாழிற் பாண ரேழிற் பாட
விரண்டுபத் தடுக்கி யொன்றுகடை வைத்த
வண்மைய ரொருவடி வண்மின ரெடுத்தென
வான்கவி வாணர் நான்கிற் பாடப்
155 பொன்முடி கவித்து வென்வே லேந்திப்
பாண்டிநா டளிக்கும் பண்பி னாண்டகை
யிரவலர்க் கடையா வாயிற் புரவலன்
கோதுபதி யொடுக்கும் பாற்கர சேதுபதி
யருளொடு நிலைஇயர் பொருணனி யுதவ
160 வன்னவன் பெயரொடு மன்னுபெயர் கொண்டு
சங்க மேவுமோ ரங்க மாகி
யூணுடை யேனைய மாணவர்க் கார்த்தி
நல்லா சிரியர் பல்லோர் வைகினர்
தொன்னூ லொருசிறை யொருசிறைப் பின்னூ
165 லோவிறந் துணர்த்துந் தாவில் கொள்கை
யழகமர் காட்சிக் கழகமுங் காண்பி
ரிலக்கியத் தனவு மிலக்கணத் தனவு
மலக்கண் டீர்க்கு மாகமத் தனவுமென
முதியவு மான்ற முறைமையி னமைந்த
170 புதியவு மாகிப் பொலிந்துற்று நசைஇ
யோரு மாக்க ளுள்ளந் தேரும்
பாண்டியன் சுவடிச் சாலையுங் காண்பிர்
தென்மொழி யெழுத்தொடு வடமொழி யெழுத்து
மீங்குநனி பாய வாங்கிலாக் கரமுங்
175 கால்கொள வாக்குபு பால்வேறு படுத்தி
யொன்றுபல வாகிச் சென்றுறப் பதிக்கு
மச்சுச் சாலையு மெச்சக் காண்பிர்
கண்டனிர் சங்க மண்டபம் புகினே
தீந்தமிழ்ப் புணரி மாந்திய மக்களும்
180 வடமொழி தேர்ந்து திடமுறு பவரு
மாங்கிலம் பயின்ற பாங்கரு மாகிப்
புரையறு நூல்கட் குரைசெய் குநரு
நால்வகை பயக்கு நூல்செய் குநரு
மோரா முதுநூ லாராய் குநருமெனப்
185 பெரும்புலவர் மருங்கமர
மண்டுடுவில் வெண்டிங்களுந்
தரங்காட்டி யரங்கேறிய
பயில்சிறப்புப் பெயரெய்திய
வறப்பரிசி லுறக்கொள்ளிய
190 நிலைபயிலுங் கலைபயிலிய
தவமலியு மவர்நடுவட்
கருங்கடலிற் செஞ்ஞாயிறும்
பொரத்தலைமை கொளத்தவிசில்
விரைப்பாண்டித் துரைத்தேவ
195 னாற்றல்சால் சிறப்பி னாங்கவீற் றிருக்குங்
காட்சி கண்டனிர் களித்தனி ரண்மின்
மாட்சியி னவனே மலர்ந்த முகத்தினன்
யாரை நீயிரென வினாவு மோ ரையிற்
போந்தனென் பெருமநின் னவைக்கள மோர்ந்தெனின்
200 | வருகெனத் தழீஇ
யிருக்கென வருகிரீ இப் போற்றினிர் சென்றநுங் கவியரங் கேற்று நச்சியாங் கிருக்குந ருளப்பட மெச்சி வாயரும் புலவன் பெருங்கவி ராயன் பாவலன் வித்துவா னியறெரி நாவல | ||||
205 | னென்றுயர் பெயர்களு
ளொன்றுற நுமக்குக் களிவர நல்கி யூர்கோ ளொருதலை மீனிருந் தென்ன வானிற வயிர மின்செய் தொளிறும் பொன்செய் யாழியும் பொலந்தகடு குழித்துப் பொற்புற வமைத்த |
||||
210 | வலந்த பொற்றொடரின்
மாண்பிற் றாகிப் பழுதறச் சமைந்த பொழுதறி கருவியு நொய்ம்மயி ராய்ந்து துய்யென நெய்த மின்னிவர்ந் தென்ன பொன்னிழை நுழைத்த மாசுகெடச் சிறந்த காசு மீரமும் |
||||
215 | விழுத்தலை யமைத்த
கழுத்தள வரையன் பணயம் பலவு மிணையறத் தரீஇப் பெருகிய மகிழ்விற் பேணுபு விடுக்கும் வருகுவிர் மாதோ வளமலி தன்மையிற் செம்பொன் பழுநிய செழுமரன் |
||||
220 | வம்பொடும் பொலிந்து வந்ததா லெனவே. |
புலவரிடத்து ஆற்றுப்படுத்தலானே இது புலவராற்றுப்படை
யெனவாயிற்று; முருகாற்றுப்படை என்றாற்போல. எனவே, மதுரைத் தமிழ்ச்
சங்கப் புலவரிடத்துச் சென்று சிறப்புப் பெயரும் பரிசிலும் பெற்றானொரு
புலவன் அவை பெறாதானொரு புலவனுக்குப் பெறுமாறு கூறி, அவனை
அவரிடத்து வழிப்படுத்தியதென்பது இதன் பொருள்.
0 comments:
Post a Comment